பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (2) தாறு அலைதீர்க்கும் குமார அலை (அல்லை) அல் - இருள் அஞ்ஞான இருள். குமரன் - அஞ்ஞான இருளைப் போக்குவான் மகமாயைகளைந்திடவல்லபிரான்'ஆதலின் (கந்அநுபூதி5) (3) ஆறலைத்தல் - வழிப்பறித்தல் - "வன்கண்ணர் ஆட்டி விட்டு ஆறலைக்கும்.அத்தம்"(ஐந்திணை ஐம்பது34)அத்தம்-வழி. 87. தோழியின் கூற்று திறம்பா டுவர்தனன் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந் திறம்பா டுவர்.முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல் திறம்பா டுவளிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந் திறம்பா டுவளி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. (ப-உ) திறம் - நமது வெற்றியை, பாடுவர் - துதிக்கின்றார். தண் தண்ணிய, புன - புனத்தில் வாழும், தெய்வமே தேவதையே, என்பர் - என்றழைக்கின்றார். (அவரியாரெனில்), சேதத்து - கேட்டையுடைய, மாந்திறம் - வலிபொருந்திய மா மரமாய்நின்ற சூரன்றன் கிளையோடு, பாடு-அழிந்தான், உவர் உவர்ப்பையுடைய, முது-பழமையாகிய, நீர்கடலின் கண்ணே, என - என்று (தேவர்கள் சொல்லும்படி) காப்பவர் - கோபித்தவராகும்; செம் - சிவந்த தினைமேல்-தினைப்புனத்தின் கண், திறம்பாள் - நீங்காதிருக்கின்றவளாகிய வள்ளிநாயகியே யுனது, துவர் - பவளம்போன்ற, இதழ் கண்டு - அதரத்தைப் பார்த்துக்கொண்டே, உருகா நிற்பர்-மனமுருகிநிற்கின்றார்,செப்புற-ஏதோவொருவார்த்தை சொல்லுதற்காகவே செந்தில் - செந்திற்பதியென்னும், தம்பாடு - தம்மிடத்தில், வரில் - வருவாரானால், இவர் - இப்பேர்ப்பட்டவர், வல்லவர் - சாமர்த்தியரே, நம் - நமது, செயல் - உபசாரச் செய்கையை, கொள்ள பெற்றுக்கொள்வதற்கு ((எ-று)இவர் எழுவாய் வல்லவர் - பயனிலை.ஏஅசை (க.உ) நாயகியே, சமுத்திரத்தின்கண் சூரன் கிளையோடு அழிந்தானென்று தேவர்கள் சொல்லும்படி வதைத்தவர் வந்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லும்பொருட் டிங்கே நமது வெற்றியைப் புகழுகின்றார்; புனத்தெய்வமே யென் றழைக்கின்றார்; தினைப்புனத்திலிருக்கும் உனது பவளநிறம்போன்ற இதழைப் பார்த்து மனதுருகி நிற்கின்றார், இவர் தமது செந்திற்பதியில் வரு வாரானால் நாம் செய்யும் உபசாரத்தைப்பெறவல்லவர்தாம்.