பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 21 அறிவினில் சென்று செருகுந் தடம் தெளிதர திருப்புகழ் 47, (4) எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் எல்லாழிழந்து சும்மா இருக்கும் எல்லை - (அலங் -10) " ம் மாள" 47. (5) என்னை மறந் திருந்தேன் யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலை நின்றது தற்பரமே அநுபூதி 28 (6) இறந்தது இவ்வுடம்பு " உடம்பொடு செத்திட் டிருப்பர் சிவயோகி யார்க்ள்ே" - திரும்ந்திரம் 121 செத்தபட் மான்ேண்டி தீயிரும்பின் நீரானேன். பட்டினத்தடிகள் - அருட்புலம்பல் 115 20. உலகுக்கு உபதேசம் கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோ யூழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் மடிப்பிறகே (பொ. உ) கோழிக் கொடியைக் கொண்ட குமரவேளின் திருவடியை வணங்காழில் இவ்வுலகிலே வாழ்வதற்கு எண்ணுகின்ற (மதியிலிகாள்) அறிவிலிகளே! உங்களுக்கு உள்ள வலிய வின்ை நோயானது (ஊழிற் பெருவலி) பழவினையாம் பலத்தை வலிமை உடையது; அது உங்கள் செல்வ்த்தை அனுபவிக்க விடாது; உங்களுடைய ಶ್ಗ எல்லாம்) செல்வப் பொருளை எல்லாம் நீங்கள் அனுபவியாமலும் ஏழைகளுக்கு ஈயாமலும் ஆழத்தில் புதைத்து வைத்தால் (நீங்கள் இறந்த பிறகு) (தும் அடிப் பி வருமோ) அந்தச் செல்வப்பொருள் உங்களுடன் கூடத் தொடர்ந்து வருமோ (வராது என்றபடி) (சு-உ) வணங்காது வாழ எண்ணுகின்றீர்களே! உங்கள் ஊழ்வினை உங்கள் செல்வத்தை அனுபவிக்க விடாது; ஈயாமற் சேர்த்துப் புதைத்த பணம் நீங்கள் இறந்தால் உங்களுடன் வராது. (கு உ) அத்தம் = பொருள். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் - நல்வழி 23. 21. மரணபயம் யம பயம் இன்மை udvarův மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணி.முகுள