பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 497 45. (வடகம்) மேலாடை - துகில் வகைகள்; முத்தோலை - முத்துக் கம்மல், (அரைவடம்) அரைச் சதங்கை, செறி - பொருந்திய (கடகம்) கங்கணம், (வித்தாரம்) மிக்குவிளங்கும் (மகர நெடுங்குழை) மகரமீன் வடிவுள்ள நீண்ட குழைகள் 46. (மாதரணி தாலி நூல்) பெண்கள் அணியும் தாலிக்கயிறு, (காஞ்சன மாலிகை) பொன் மாலைகள், (மதாணி) கழுத்தணியின் தொங்கல், (பீதாம்பரம்) பொன்னாடைகள் 47. (மதிப்பரிய) விலை மதித்தற் கரிதான (கைச்சரி) மகளிர் கையணி வகை, (சரப்பணி) வயிரம் அழுத்தின கழுத்தணி வகை, (இலைச்சினை) இலச்சினை - முத்திரை மோதிரம், பதக்கங்கள் இவை யாவும் உட்பட அணிப்படலம் - ஆபரணக் குவியல்களை கூட்டத்தை இட்டு வை கொண்டு வந்து வைப்பாயாக. 48. (மாடை) பொன் வகைகள், தங்க நாணய வகைகள், (பாட்டி) பாட்டியார் புதைத்து வைத்துள்ள குடப்பணம் - குடத்துள் சேமித்து வைத்த பணக் குவியல் இவைகளை ஒன்று கூட்டி (உருக்க விருப்புடன்) விருப்புடன் உருக்க விருப்பத்துடனே - ஆசையுடனே, (உருக்க) (நெருப்பில்) உருக்குவதற்கு 49. (இடு) கொண்டுவந்து சேர்ப்பாயாக (ப்ரசங்கி யாமல்) வேறு பேச்சு -வீண்பேச்சுப் பேசாமல், (உலை அனந்த கோடி) அனந்தகோடி - கணக்கற்ற (உலைகளை) அடுப்புக்களை, எரிந்து சத்துப்போகாத கரியும் நிரம்பவேண்டும். 50. (இது) இதோ பார் - இந்த உண்டையாயிருக்கும் பொருள் பழைய கவுரி பாஷாண உண்டை என்பது இடு சகலவேதி இடப்படும் எல்லாப் பொருள்களையும் இது வேதிக்க வல்லது (பொன்னாக்க வல்லது); (பூநாகம்) பூநீறு என்னும் மருந்து, செம்பனோடு