பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பேராசிரியர் மேகலை நாற்பது வயதைத் தாண்டிய பேரிளம் பெண். பெண்ணியம்பேசும் கொள்கையர் (Feminist): எல்லோருக்கும் உதவும் இயல்பினர். இவரது இல்லம் மாணவர் மொய்க்கும் ஒரு தேன் கூடு. பலகலைகளும், கொள்கைகளும் சந்திக்கும்.ஆய்வரங்கம். மருத்துவ மாணவனாகிய நம்பி, மேகலையின் நாடித் துடிப்பைச் சோதித்துக் கொண்டிருக்கிறான். நம்பி: நேற்று உண்டது நினைவிருக்கிறதா? ஒவ்வாமையால் தான் உங்களுக்கு - உடம்பெல்லாம் தடிப்பு, நாக்கை நீட்டுங்கள், (மேகலை நாக்கை நீட்ட நம்பி உற்றுப் பார்க்கிறான்.) மேகலை: கத்தரிக்காயும் கருணைக்கிழங்கும் எனக்கு - ஒத்துவராத உணவுப் பொருள்கள். நேற்று விமலையின் வீட்டில் விருந்து. கத்தரிப் பிஞ்சை நாலாய்ப் பிளந்து எண்ணெயில் துவட்டி எடுத்து வைத்திருந்தாள். அவளுக்காக உண்டேன். மறுத்தால் தவறாக நினைப்பாள் என்பது கருதி. நம்பி: நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் தோழிக்காகக் கவிஞர் முருகுகந்தரம் 94