பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பெண்களைத் திரட்டிக் கொண்டு பயிற்சிக் கல்லூரி எதிரில் ஒரு நாள் - அடையாள உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். நீ தலைவி ஆகியிருப்பாய் தோகை: என்ன கொடுமை! தன் தலைவரை விடுவிக்கச் சொல்லித் தேனரசன் என்பவர் தீக்குளித்துச் செத்தார் பத்திரிகைச் செய்தி (தோகை பத்திரிகையை நம்பியிடம் காட்டுகிறாள்) நம்பி: பொய்! அப்பட்டமான பொய். அவன் இறக்கும் போது மருத்துவ மனையில் நான் தான் வாக்கு மூலம் வாங்கினேன். அவன் செத்தது வயிற்று வலி தாளாமல், பத்திரிகைச் செய்தி அவன் இறப்பின் மீது குத்தப்படும் அரசியல் முத்திரை. மேகலை: நோயாளியான ஒர் ஆண்மகனுடைய சாவுக்கு கவிஞர் முருகுசுந்தரம்