பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருநெருப்பை மூடிவைத்துப் பேசாமல் தூங்கும் எரிமலையைப் போலிருந்தார் இன்று. இடறிவிட்ட வறடிகல் பள்ளம் பண்ணிசைப் பாவலன் ஞானசம் பந்தனும் வண்ணச் சரபமும் அருணகிரி நாதனும் கண்ணும் காலும் இன்றியிச் செந்தமிழ் மண்ணை அளந்த இரட்டைப் புலவரும் பாடிய பழம்பதி திருச்செங் கோட்டில் விசாகப் பெருவிழா மிகப்பெருந் திருவிழா. தவிலிடி முழக்கம் ஒலிக்கப் பத்துநாள் அமளி துமளிப் படுமித் திருநகர். சைவத் திருமுறை விழாவும், கண்ணகி ஐயை விழாவும் அப்பொழுது நடக்கும். ஊரும் பேரூர்; இவ்வூர்த் தேரோ ஆரூர்த் தேருக் கடுத்த பெருந்தேர். காலை விடிந்ததும் கடபுடா ஒலியுடன் ஆனைமேல் ஆண்டவன் ஏறி யிருக்கச் சேனா பதிபோல் செல்லுவார் குருக்கள். பெருந்தேர் விழாவால் இவ்வூர் சிலநாள் விருந்துர் ஆகும்; வேளாளப் பெண்டிர் கொத்து நகையுடன், கொண்டைப் பூவுடன் சத்தச் சிரிப்புடன் சாரி சாரியாய்ச் சிற்றுாரில் இருந்து முற்றுகை போடுவர். அடிக்கடி கேட்கும் முதலிமார் வீட்டுச் சடக்கொலித் தறித்தொழில் சிலநாள் தூங்கும். மேயும் சாமி மாடும், குவித்தமாங் காயும் ஈயும் எங்கும் தென்படும். கவிஞர் முருகுசுந்தரம் 232