பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்செருப்பைச் சாக்கடையில் தள்ளு தல்போல் கடையரென்று தள்ளுகிறீர் ஒர்கூட் டத்தை! மேற்குலத்தார் நீங்களென்று சொல்லு கின்றீர் (மேனியின் தோல் வெளுப்பென்ற கார ணத்தால். காற்றடித்தால் இமைமூடும் கண்ணில், வட்டக் கருவிழியை மட்டமென்று சொல்ல லாமா? வேற்கண்ணார் கருமையென்ற கார ணத்தால் விளையாடும் கூந்தலினை வெறுத்தா விட்டார்? கடைகளிலும் விலக்கிவைத்தீர்; புனித மான கல்லூரி வாயிலுக்குள் விலக்கி வைத்தீர்; நடைபாதை தனிற்கூட விலக்கி வைத்தீர்; நங்கையர்கள் ஏறிநிற்கும் ஆட ரங்கில் படக்காட்சிக் கொட்டகையில் விலக்கி வைத்தீர்; பசிக்கொடுமை தாளாமல் நுழையும் போது விடுதிகளில் விலக்கிவைத்தீர்; மக்கட் பண்பை விலைகூறி விற்பதற்குத் துணிந்து விட்டீர்! ஒட்டகத்தைப் போல்முகத்தான், சுதந்தி ரத்தின் உயரத்தைக் காட்டுதற்கு நமது நாட்டில் கட்டிவைத்த சிலையைப்போல் உயர்ந்தி ருந்தோன், கண்ணிர்க்குத் துணைநின்ற கருணை லிங்கன் பட்டாளத் துணையுடனே இந்த நாட்டில் பஞ்சைகள் மேல் படர்ந்திருந்த அடிமை வேரை வெட்டிவிட்டான்; ஆனாலும் அவர்கள் வாழ்வில் வேதனைதான் அடியோடு தீர வில்லை. முருகுசுந்தரம் கவிதைகள் 2了5