பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியங்கள் அதிகம் காணப்படாத குறையை இவரின் கண்ணிர்த்தவம் போக்குகிறது. இன்று சிலர் எழுதும் கவிதைகளைப் படிக்கும் போது, ஒர் ஆங்கிலப் பெண்ணிடமோ உருதுப் பெண்ணிடமோ, மலையாளப் பெண்ணிடமோ உறவாடுவதைப் போன்ற உணர்வு தான் தோன்றுகிறது. கவிஞர் முருகுவின் கவிதை நம் சொந்த அத்தைமகள் எதிரில் நின்று பேசுவது போல் இருக்கிறது. - டாக்டர் ஒளவை நடராசன். நெடுங்கவிதைகள் பெருமூச்சு போல் ஆயாசம் தருவன. ஆனால் முருகுவின் வெள்ளை யானைக் காவியம் நெருக்கித் தொடுத்த ஆச்சரங்களால் கட்டப்பட்ட நிலைமாலை போல. கவர்ச்சியும் அழகும் நிறைந்தது. சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணி வகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக் கவிதை இது. தமிழ்க் கவிதைக்குப் புதுவழிகாட்டும் கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இக்காப்பியம் தமிழ்க் கவிதையைப் புதிய கற்பகச் சோலைக்குள் கொண்டு சென்றுவிட்டது. – u net i umeon. புதிய களங்கள்-புதிய போர்கள் புதிய வெற்றிகள்-இவைகளைப் புனையும் நாடகம் வேண்டி நம்மொழி கிடந்ததுஎன்ற இலங்கைக் கவிஞர் மஹாகவி வருந்திப் பாடிய குரலுக்குப் படைப்புத் திறத்தால் பதில் சொல்லியிருக்கிறார் கவிஞர் முருகுகந்தரம். அந்தப் பதில்தான் எரிநட்சத்திரம்" - கவிஞர் மீரா. Thiru Murugusundaram, who is a Boswell to Bharathidasan, himself is a good poet in the model of his mentor Bharathidasan. Indian Express 30-1-1991.