பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக்கதை 1984 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் பாரதப்பிரதமர் இந்திராகாந்தி குண்டுக்கு இரையான நேரம். தலை நகர் தில்லி யெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவைப்புச் சம்பவங்கள். ஒரு நாள் இரவு, வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட புள்ளிமானாக ஒடி வந்து அம்ரிதாகெளர் என்ற பஞ்சாபிப் பெண் நெடுமுடி என்ற காவல்துறை அதிகாரியின் இருப்பிடத்தில் தஞ்சம் புகுகிறாள். நெடுமுடி குண்டர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றிச் சில நாட்கள் தன் அறையிலேயே தங்க வைத்திருந்து அவள் உறவினர்கள் வாழும் ஜலந்தருக்கு அனுப்பி வைக்கிறான். சில ஆண்டு கழித்து இருவரும் பெங்களூரில் சந்திக்கின்றனர். நம்பி, நெடுமுடியின் தம்பி, தமிழகப் பல்கலைக் கழகமொன்றில் மருத்துவக்கல்வி பயிலும் மாணவன்; காந்தியவாதி; வீணா அதே பல்கலைக் கழகத்தில் வரலாறு பயிலும் மாணவி: ஈழத் தமிழ்ப்பெண். சொற்கோ சட்டக்கல்வி பயிலும் பல்கலைக் கழக அரசியல்வாதி; தோகை உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி பெறும் பாணவி. இந்தக் கொள்கை மாறுபட்ட கோள்கள் சுற்றிவரும் சூரிய மண்டலம் தமிழ்ப் பேராசிரியர் மேகலை. இவர் ஒரு முதிர் கன்னி. அவருடைய இல்லம் பல்கலைக் கழக மாணவர்கள் அடிக்கடி கூடிக் கருத்துப் போர் செய்யும் கலைக்கூடம். வேண்டுமென்றே சொற்கோ மாணவர் போராட்டத்தைக் கிளப்பி விட, நம்பி கல்லெறிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இலட்சிய வெறி கொண்ட வீணாவின் உள்ளமும் நம்பியின் உள்ளமும் காதலால் நெருங்குகின்றன. காதலா, இலட்சியமா என்ற உளப் போராட்டத்தில் வீணா கொள்கைக்காகக் காதலைப் பலியிடுவதோடு தன்னையும் பலியிட்டுக் கொள்கிறாள். நெடுமுடி அம்ரிதாவின் காதல் திருமணத்தில் முடிகிறது. முருகுசுந்தரம் கவிதைகள் 81