உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் எது மோதல்கள் பெரிதுபட வாய்ப்புகள் குறைவு. பிரதானம் வெறும் தனி மனிதனா, சமூகத் தனிமனிதனா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனா, மொத்த மனித குலப்பின்னணியில் அச்சமூகத்தின் நலனா? வாழ்வில் நம்பிக்கை வறட்சியா? நம்பிக்கையா? இப்படிப்பட்ட போக்குகளில் இரண்டு பண்பாட்டு அணிகளே உருவாக முடியும்! இதில் முற்போக்கு அணியினர் தங்கள் முன் இருக்கும் பிரச்சனை எது வாயினும் மொத்த மனிதகுல நலனில் தனி மனித நலன், குழு நலன், இன நலன், சமூக நலன், என்ற அளவில் நின்று, கலை இலக்கியச் செய்திகளை வெளியிடுவார்கள் என்றால், பிளவும் பூசலும் பகையும் அற்ற, செழுமையான சமூக ஆன்மாவை உருவாக்க முடியும். இன்று இருக்கின்ற சாதி, இன, மொழி, மத மோதல்கள் இப்படிப்பட்ட சமூக ஆன்ம உருவாக்கத்தில் அழிந்து போய்விடும். ஜீவா இதைத்தான் கனவு கண்டார் . அதை நாம் செய்வோம்.