பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 17 மேலும் இந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த பல வெளிநாட்டுக் கதைகளில், மாக்சிம் கார்க்கி, மைக்கேல் ஜோஷெங்கோ, வாலரி, புரூஸோவ், மைக்கேல் ஷோலகோவ் நிக்கொலாய் திக்கனோவ், இலியா கிரென்பர்க் முதலிய சோவியத் எழுத்தாளர்களின் கதைகளும் இடம் பெற்றிருந்தன. புதுமைப்பித்தனும் நானும் என்றாலும், நான் இங்கு ஓர் இரகசியத்தைக் கூற வேண்டும். கல்லூரியில் படித்து வந்த காலத்திலேயே, அதாவது 1941 ஆம் ஆண்டிலேயே எனது கதைகள். முதலியன பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கி விட்டன. இதன்பின் 1942இல் நடந்த போராட்டத்தின் போது, நெல்லையில் மாணவர்களை ஒன்று திரட்டிய போராடியதன் விளைவாக, அதே ஆண்டில் சிறைப் பட்டேன்; இதனால் என் கல்லூரிப் படிப்பும் தடைப் பட்டது . இதன்பின் நான் முழு நேர எழுத்தாளனாகவே மாறி, எழுத்தையே தொழிலாகக் கொள்வது என்று தீர்மானித்து, 1944இல் சென்னைக்குச் சென்று, 'தினமணி' பிரசுராலயத்தில் உதவியாசிரியனாகச் சேர்ந்தேன் . இந்தக் காலத்தில்தான் எனக்குப் புதுமைப்பித்தனின் நெருங்கிய நட்பும் அன்பும் கிட்டின . இவ்வாறு அவரோடு நான் நெருங்கிப் பழகி வந்த காலத்தில், நான் கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாகவும், சோவியத் நாட்டை நேசிப் பவனாகவும் இருந்த விஷயம் அவருக்குப் பிடிக்கவில்லை . எழுத்தாளன் கம்யூனிசச் சித்தாந்தியாக மாறினால் அவனது சுதந்தரம் பறிபோய்விடும் என்றே அவர் கருதினார் ; மேலும் அப்போது அவர் கம்யூனிச விரோதியாகவும் ஸ்டாலினைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவராகவுமே இருந்தார். இதனால் கம்யூனிச அபிமானத்தையும், அனுதாபத்தையும் நான் கைவிடுவதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அப்போது தான் அவர் என்னிடம் மாஸ்கோவில் 1937இல்