முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
41
சொற்சேர்க்கை. இது வரலாறு பற்றிய மார்க்சியக் கருத்தினால் புரிந்து கொண்டபடி, உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களைச் சித்தரித்துக் காட்ட இலக்கியமும் ஓவியமும் ஏற்றுக்கொண்டுள்ள முறையாகும்” என்று எழுதியுள்ளது. எனவேதான் இந்தச் சொற்சேர்க்கை விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது; நம்மையும் இதுபற்றிச் சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டுகிறது.
இலக்கியத்தில் “கட்சி உணர்வு”:
இவ்வாறு சோஷலிச எதார்த்தவாதம்தான் சோவியத் எழுத்தாளர்களின் மார்க்கமாகும் என்று அறிவித்த ஸ்டாலின், “சோஷலிச அழகியலின் அடிப்படைக் கோட்பாடு என்பதே, இலக்கியத்தில் போல்ஷ்விக் கட்சி உணர்வு குடிகொண்டிருப்பதையே குறிக்கும், இதுவே லெனின் காட்டிய வழி” என்றும் விளக்கம் கூறிவிட்டார். இந்த விளக்கத்தின் அடிப்படையில் 1932இல் தோற்றுவிக்கப்பட்ட சோவியத் எழுத்தாளர் சங்கம் தனது சட்டதிட்டங்களிலேயே இலக்கிய இயக்கத்துக்கும், கட்சி மற்றும் சோவியத் அரசு ஆகியவற்றின் கொள்கைக்கும் உள்ள நேரடியான நெருங்கிய தொடர்பை வலியுறுத்தும் ஷரத்து ஒன்றையும் சேர்த்துக் கொண்டது (Soviet Literature No. 12/1949).
லெனின் காட்டிய ‘கட்சி உணர்வு’ என்பது என்ன? ஸ்டாலின் இதற்கு 1905இல் லெனின் எழுதிய “Party Organisation and Party literature” என்ற கட்டுரையையே ஆதாரமாக எடுத்துக் கொண்டார். இதில் ‘பார்ட்டி லிட்டரேச்சர்’ என்ற சொற்கள் உண்மையில் கட்சி சம்பந்தப்பட்ட நூல்கள், பிரசுரங்கள் முதலியவற்றையே குறித்தன; இலக்கியத்தைக் குறிக்கவில்லை. 1905 அக்டோபரில் நடந்த பொது வேலை நிறுத்தம் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக, ஜார் மன்னர் மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கினார். இதனால் பத்திரிகைச் சுதந்திரம்