உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்


அதாவது முதல் சோவியத் எழுத்தாளர் நடைபெற்று 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இரண்டாவது சோவியத் எழுத்தாளர் மாநாட்டில், ஸ்டாலின் காலத்திய “முரண்பாடுகள் இல்லாத சமுதாயம்”, “நிறைவே உருவான கதாநாயகன்” (Positive Hero) போன்ற போக்குகள் விமர்சிக்கப்பட்டாலும் கூட, இலக்கியம் என்பது கட்சிக்குப் பணிபுரிவதாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தே மீண்டும் வலியுறுத்தப்பட்டது, ஸ்டாலின் காலத்திற்குப் பின் குருஷ்சேவ் காலத்தில் இலக்கியத்துறைக்குப் பொறுப்பு வகித்த கட்சித் தலைவரான அலெக்சிசுர்க்கோவ் அந்த மாநாட்டில் ஆற்றிய வழிகாட்டி உரையில், “நாம் பல்வேறு போக்குகளைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையான சோஷலிச எதார்த்தவாதம் ஒன்று மட்டுமே சோஷலிச சமுதாயத்தினது இலக்கியத்தின் படைப்பாக்கப் போக்காகும். இலக்கியத்துக்கு ஒரு திட்டவட்டமான அரசியல் சமூகச் செல்வாக்கு உண்டு. அது அரசியலோடு சம்பந்தப்பட்டதாகவும், அதற்குக் கீழ்ப்படிந்ததாகவுமே இருக்க வேண்டும்” என்று கூறினார். என்றாலும் 1956 பிப்ரவரியில் நடந்த 20ஆவது கட்சிக் காங்கிரசுக்குப் பின்னர் - அதாவது அந்தக் காங்கிரசில் ஸ்டாலினது தனிநபர் வழிபாட்டுப் போக்கையும், ஸ்டாலின் காலத்துக் கொடுமைகளையும் அம்பலப்படுத்திய பின்னால், சோவியத் எழுத்தாளர்கள் சிறிது காலத்துக்குச் சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அந்தக் காலத்தில்தான் Not by bread alone - மனிதன் வாழ்வது ரொட்டியினால் மட்டுமல்ல என்ற விளதிமிர் துதின்த்சேவ் நாவலும், சிலியா கிரென்பர்கின் ‘உருகும் பனி’ - Thaw - என்ற நாவலும் வெளிவந்தன. (இந்த நாவலை நான் தமிழில் ‘வசந்தமே வருக’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறேன்). இதேபோல் ஸ்டாலின் காலத்துச் சிறைக்கொடுமைகளைப் பற்றி அலெக்சாந்தர் சகல்குசனித்சின் எழுதிய ‘இவான் தெனிசோவிச்சின் வாழ்க்கையில் ஒருநாள் One Day in the life of Ivan Dehisovich’ என்ற