முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
87
இலக்கியப் பெருமன்றமே பெரும் பேச்சாளர்களுக்காகச் சிறப்புரைகளும் பேருரைகளும், பட்டிமன்றங்களும், இதர நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யும் ஒரு துணை அமைப்பாக மாற்றிற்று, அல்லது ஆண்டுக்கு ஒரு நாடகம் நடத்தும் மேடையாயிற்று. புதிய ஜனநாயக, சோசலிச, மனித நேயம் கொண்ட புதிய மனிதனை உருவாக்கும் பன்முக முயற்சிகளைக் கொண்ட அதன் பண்பாட்டு லட்சியத்தின் மீது தூசு படியத் தொடங்கிற்று. லட்சியப்பற்றும், வேகமும் கொண்ட இளைஞர்கள் விரக்தியடைந்தனர். இதற்குப் புறக் காரணங்களும் உள. கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு என்று முழுநேரப் பொறுப்பாளர் யாரும் எழுபதுகளில் இல்லை தலைவர் ரகுநாதனின் உழைப்பு முழுக்க முழுக்க சோவியத் நாடு அலுவலகத்துக்குப் போயிற்று. பாண்டியன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் அவருடைய கலை இலக்கியப் பார்வையும் அரசியல் தளத்தில் கால் ஊன்றி நின்றுகொண்டு பண்பாட்டுத் தளத்தை அணுகும் பார்வையாக மாறிவிட்டிருந்தது. இந்தப் பார்வையானது கலை இலக்கியப் பெருமன்றத்தை மொத்தமாகப் பாதித்தது. கலை இலக்கியப் பெருமன்றம் என்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் லட்சியங்களைப் பிரகடனம் செய்யும் கலை இலக்கிய மேடையே என்ற கருத்து மேலோங்கிற்று. ஆகப் பெரிய லட்சியம் மனிதகுல சேமம். இதை அடையத் தொழிற் சங்கங்கள் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துகின்றன. அரசியல் கட்சிகள் அரசியல் போராட்டங்களை நடத்துகின்றன. பண்பாட்டு அமைப்புகள் (கலாச்சார அமைப்புகள்) பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துகின்றன. இவற்றின் லட்சியங்கள் ஒன்றே. செயல்பாடுகளும் ஒரு நோக்கத்தைக் கொண்டவையே ஆனாலும் செயல்பாடுகளின் தன்மைகள் தளத்துக்குத் தளம் வித்தியாசமாகவே உள்ளன. உடம்பின் பொது லட்சியம் ஒன்றே. இந்த லட்சியத்துக்காகவே எல்லா உறுப்புகளும் செயல்படுகின்றன. ஆனாலும் கையின் செயல் வேறு, காலின் செயல் வேறு, மூளையின் செயல் வேறு, இதயத்தின்