பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒ அ.ச. ஞானசம்பந்தன் மிருந்து தம்மை வேறுபடுத்திக்கொண்டு பிரிந்து நின்றது என்று நினைப்பதற்கோ கூறுவதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை. - - தொன்றுதொட்டு இருந்து வருகின்ற சில சமுதாய அடிப்படைகளை இத்தமிழர் போற்றிப் பாது காத்தனர். எந்தப் போரில் யார் வென்றாலும் இந்த அடிப்படையில் மாறுபாடுகள் தோன்றவில்லை. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே தொடங்கி வளர்ந்துவருகின்ற இத்தமிழ்க் குடியில் கல்வியாளர் என்ற முறையில் பார்ப்பனருக்கு மரியாதை தரப்பட்டதே தவிரப் பிறப்பால் எதுவும் தரப்படவில்லை. ஆற்றொழுக்குப் போன்ற இவர்கள் பண்பாட்டை, நாகரிகத்தை, சமுதாயத்தைக் குலைக் கக்கூடிய அடியோடு புரட்டக்கூடிய அல்லது பெயர்க்கக்கூடிய எந்த ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில் திருவள்ளுவர் காலம் வரையில் தோன்றவில்லை. தனிமனிதனுக்குரிய சில அறங்கள், சமுதாயத்திற்குரிய சில அறங்கள், அரச தருமம், போர்த்தருமம் என்பவை தொன்றுதொட்டே இருந்துவந்தன ஆதலின் இவற்றில் எவ்விதமாற்றமும் தோன்றவில்லை. ஆதலால்தான் தனிப்பட்ட நீதி நூலுக்குத் தேவையின்றிப் போய்விட்டது போலும். அடுத்து, காலம் மாறுகிறது. களப்பிரர் என்று. சொல்லக்கூடிய வேற்றினத்தார், எருமைநாடு என்ற மைசூர்ப் பிராந்தியத்திலிருந்து கோவை வழியாகத் தமிழகத்தில் புகுந்தனர். கொள்ளைக் கூட்டத்தின ராகிய இவர்கள் தமிழரும் அல்லர்; தமிழ்மொழிக்குப் பகைவரும் ஆவர். தமிழர் நாகரிகம் பண்பாடு என்ப