பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் 喻 43 யுமோ பெற்று அதிலேயே மகிழ்ந்து நின்றுவிடு கின்றனர். இவற்றிற்கு அப்பால் அடைய வேண்டிய ஒன்று உண்டு என்பதையும், அதனை அடையும் வழி என்ன என்பதையும் ஏனோ இவர்கள் சிந்திப்பதே இல்லை. இவை இரண்டும் மறக்கப்பட்டவழிக் கல்வி யும் அது தரும் ஏனைய பயன்களும் காகிதப் பூக்க ளாகவே அமைந்துவிடுகின்றன. இதனை மனத்துட்கொண்டே மாபெரும் கல்வி யாளரும், அதிகாரத்தின் உச்சக்கோட்டில் நின்றவரும் ஆகிய மணிவாசகர், கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் (திருவாச: 558) என்றும் 'கல்வி என்னும் பல் கடல்பிழைத்தும் (திருவாச4-38) என்றும் பாடிச்சென்றார். இவற்றையெல்லாம் உள்ளடக்கி வாலறிவன் திருவடிகளைத் தொழும் இயல்பை விட்டுவிட்டுப் பெற்ற கல்வி எவ்விதப் பயனையும் தாராது என்பதை வள்ளுவர், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (2) என்று பேசுகின்றார். - கடவுளுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு. அப்படி யிருக்க வாலறிவன் துய்மையான அறிவு சொரூபி) என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் நோக்க மென்ன? கல்வியென்பதே மூளை, அறிவு, எண்ணம், சொல் என்பவற்றின் அடிப்படையில் தோன்றுவதாம் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இக்கல்வியைப் பெறுவதற்கு அறிவு துணைசெய்கிறது என்பதில் ஐய மில்லை. ஒரு ரோஜாச்செடி வேரின் மூலம் பூமியி