பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இ. அ.ச. ஞானசம்பந்தன் அடக்கினாலும் ஏதோ ஒன்று எஞ்சியிருந்து கொண்டு மனத்தில் துயரத்தை விளைவிக்கும். அதையும் போக்க வேண்டுமேயானால் விருப்பு - வெறுப்பு, இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், சூடு - குளிர்ச்சி என்ற இரட்டைகளிலிருந்து விடுபட்டு இவற்றைச் சமமாகக் கருதும் மனநிலை வளரவேண்டும். இந்த மனநிலை அடைந்துவிட்டால் எந்த ஒன்றிலும் வெறுப்பு அல்லது விருப்பு ஏற்பட வழியேயில்லை, இந்த நுணுக்கத்தை அறிந்து கொண்டார் வள்ளுவர். அதனாலேயே வேண்டுதல் இலான் என்று மட்டும் கூறாமல் வேண்டாமையை யும் சேர்த்து இலான் என்று கூறுகிறார். சற்றுச் சிந்தித் தால் இந்தத் தொடரிலுள்ள சிக்கல் நன்கு விளங்கும். வேண்டுதல் இல்லையென்றால் வேண்டாமை அங்கு வந்து நிற்கும்; வேண்டாமை இல்லையென்றால் வேண்டுதல் அங்குவந்து நிற்கும். இவை இரண்டில் ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டுதான் மனித மனம் வாழமுடியும். இவை இரண்டையும் கடந்த ஒரு நிலை உண்டு என்பதைக் கூறவந்த வள்ளுவர் இலான் என்ற சொல்லை வேணடாமைக்குப் பின்னர் வைக்கின்றார். வேண்டுதல் வேண்டாமை இலான் என்று எதிர்மறை முகத்தான் கூறினார். அந்த நிலை அல்ல்து பொருள் என்ன என்பதை உடன்பாட்டு முகத்தால் கூறாமைக்குக் காரணம் என்ன? சற்றுச் சிந்தித்தால் அந்த நிலை தெய்வீக நிலை என்பது நன்கு விளக்கும். இந்தச் சமதிருஷ்டி நிலையை அடைந்தவர்களைப் 'பரமாத்மா என்று கீதை பேசுகிறது. இந்தநாட்டில்