பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்புரை யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு 2001ஆம் ஆண்டின் ஆரம்பநாட்கள். "திருவாசகம் சில சிந்தனைகள்” ஐந்தாம் பகுதியுடன் முழுமைபெற்றாயிற்று. தம்மை உசுப்பிய பெரியோர்களை நினைந்தும் தம்முடன் பழகிய அறிஞர்களை நினைந்தும் "நான் கண்ட பெரியவர்கள்” என்ற தலைப்பில் 'ஐயா எழுதிய நூலும் நிறைந்தாயிற்று. 'இதன்பின் என்ன செய்வது? மூளையைப் போட்டுத் திருகியபடி ஐயா. உடல்ரீதியாக முதுமை கொஞ்சம் முறுவலித்தாலும் மனத்தளவில் இளமை நர்த்தனம் எப்போதும் போல்தான். தியானமும் தூக்கமும் தவிர, சும்மா இருப்பதென்பது ஐயாவால் முடியாததொன்று. 'தொல்காப்பியம் படிப்போமா? நானும் டாக்டர் சிவராசனும் கெளரி அங்கிளும் தொடுத்த வினா இது. "தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு புதிய உரைசெய்ய முன்பு நினைத்ததுண்டு. இப்போது எனக்கு இவற்றில் மனமில்லை.” முடியாதென்றபடி கையசைப்பும் தலையசைப்பும்.