பக்கம்:முல்லைக்கொடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சிங்க இலக்கியம் பயிலத் தொடங்கிய நேரம். அதற்குத் துணை நிற்கும் என்பதால், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலைத் தொடர்ந்து படித்து வந்தேன். அதில், தோரமங்கலம் ஆசிரியர் வரத நஞ்சையப் பிள்ளையவர்கள் கலித் தொகைப் பாடல்களுக்கு அளித்து வந்த விளக்கப் பேருரை, அறிவுக்கு விருந்தளிக்கும் ஆழம் உடையதாய் அமைந்திருந்தது.

அதைப் படிக்கும் பொழுது கலித்தொகையின் ஒவ்வொரு பாட்டின் கருப் பொருளும் எந்தச் சூழ்நிலை யினைச் சுட்டி நிற்கிறது என்பதை விளக்கும் விரிவான உரையை முன்னுரையாக அளித்துப், பாடற் பொருளை விரித்துரைப்பதால், ஒவ்வொரு பாட்டின் பொருளையும் தெளிவாக உணர முடியும்; ஒவ்வொரு பாட்டின் விளக்கமும் ஒரு சிறு கதை போல அமைந்து, படிப்பவர்க்குச் சுவையூட்டுவதாயும் அமையும் என உணர்ந்தேன்.

அவ் வகையில் எழுதப்பட்ட கலிப் பாக்களில், முல்லை சார்ந்த கலிப் பாக்கள் பதினேழின் விளக்கம், முல்லைக் கொடி என்ற பெயர் தாங்கி வெளிவருகிறது. இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் பதிப்பகத்தாருக்கு என்

கா. கோவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/5&oldid=707849" இலிருந்து மீள்விக்கப்பட்டது