பக்கம்:முல்லைக்கொடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி

(முன்னுரை)

முல்லைக் கொடி என்னும் இந்நூல் ஆயரினத்த வரின் வாழ்வுபற்றி எடுத்துக் கூறுவதாகும். செந்தமிழ் இனிமை செறிந்த கலித்தொகையுள், முல்லைக்கலியினைச் சுவைபட விளக்குவது இது. இதன் கண் அமைந்த பதினேழு பாடல்களையும் மிக விரிவாக, நூலின் சுவை மிகுமாறு திறம்பட விளக்கி, ஆசிரியர் திரு. கா. கோவிந்தன் அவர்கள் எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழ்ப் பெரு மக்களுள், சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தவர் ஆயர் இனத்தவர். தமிழ் இலக்கியங்களைக் கற்பவர் இதனை நன்கு அறிவர். இயற்கையின் அமைதியோடு ஒட்டி யமைந்தது ஆயர்களின் வாழ்வு. எழிலும் வளமும் வாய்ந்த இயற்கையைத் தம் வாழ்வின் நலத்துடன் பிணைத்துக் கொண்டவர் இவர். இதன் மூலம் நலமான வாழ்வும் இன்பமும் கண்டு பீடுடன் வாழ்ந்தவர். ஆண்மை, கடமையில் உறுதி, நேர்மை, கபடற்ற தெளிந்த உள்ளம், இனக் கட்டுப்பாடு முதலிய அரிய பண்புகள் பலவும் அவர்பால் அமைந்து விளங்கின.

அன்று வாழ்ந்த ஆயரின் பல்வகைச் சிறப்புக்களை யும் இன்றும் தென்னாட்டில் நாம் நேரிற் காணலாம். தென்னாட்டின் பல பகுதிகளில் வாழும் ஆயர் குடிப் பெருமக்கள், தம் பழஞ்சிறப்புச் சற்றேனுங் குறையாமல், இன்றும் வீறுடன் வாழுகின்றனர். அன்று போலவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/7&oldid=707851" இலிருந்து மீள்விக்கப்பட்டது