உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டரைக் கூப்பிடுவான். டாக்டர். "வியாதி இனி தீராது" என்று தெரிவித்ததும், நாய்க்குச் சொந்தக்காரன் நாயை உடனே சுட்டுக் கொன்றுவிடுவான். கட்டியல்லவா. ரொட்டி போட்டு. வளர்த்தோம்? பால் ஊட்டினோமே, படுக்கை தந்தோமே, பக்கத்திலே வருமே. நாவசைத்து நன்றி காட்டுமே, நாம் வளர்த்த நாயை நாமே கொல் வதா ? என்று எண்ணாமல், கட்டாயம் அவன் சுட்டுக் கொல்வான். ஏன்? சிரித்தே வளர்ந்த நாய்-நோயால் சிதைக்கப்படுவதைவிட, துடித்துத் துடித்து துவளுவதை விட-மரண மூச்சு விடமுடியாமல், அழுவதைவிட அதைக்கண்டு, தான் திகைப்பதைவிட. அழித்துவிடுவது

  • அரிய செயல்' என்று அங்கே கொள்ளப்படுகிறது.

அதை (Crueal Kindness) இதயமேற்ற அன்புக் கொடுமை என்பர். இதே முறையினைத்தான் நாங்கள் 'காங்கிரஸ்' விஷயத்தில் காட்ட விரும்புகிறோம். நேரு வெளியேறி ராஜாஜி வெறுத்து, சலசலப்பு-சஞ்சலம் வலுத்து, கழுதை கெட்டுச் சுவர் ஓரத்திலே ஒட்டி நிற்பதுபோல, நல்லவர் களெல்லாம் கைவிட்டு, இன்று நாடோடிகளெல்லாம் காங்கிரசை ஆதரிக்கும் அளவுக்கு, நோய் கொண்ட நாயாக' காங்கிர ஸ், இருப்பதைவிட அது அழிவது. நல்லதல்லவா? . கல்லூரி கட்டிடத்தைக் கொத்தன் கட்டினான். அதற் காக அவனையா பிரின்ஸ்பாலாக்குவது ? அல்லது ஆசிரியனா கவா அமர்த்துவது? கொத்தன் பள்ளிக்கூடம் கட்டின மைக்கு பாராட்டுரை தரலாம். பணம். கூட வேண்டு மானால் போட்டுத் தரலாம். கட்டின காரணத்துக்காக கொத்தனையே வாத்தியாராக அமர்த்தினால், பையன்களுக்கு கொத்து வேலை செய்யத் தெரியுமே தவிர. புத்தகத்தைப் படிக்கவா முடியும் ? அதேபோல சுதந்திரம் வாங்கிக்