உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சீனாவின் விலாவிலே ஜப்பானியனின் தாக்குதல். வெளியே அயலவன்படை, உள்ளே உள் நாட்டுப் படை களின் கைகலப்பு இந்த நெருக்கடியான சமயத்தில் ஒரு சோகச் சித்திரம். தியாகத்தீயில் குதிக்க ஓடிவரும் திராவிட மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. கோமிண்டாங் படைகளின் எதிர்ப்பு பயங்கரமாகி விட்டது. கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பைத் துளைத்து வெளி யேற வேண்டிய சூழ்நிலை.எதிரிப்படைகளின் வியூகத்தை ஊடுருவி வெளியே புறப்பட்டுவிட்டார்கள். புறப்பட்ட வர்கள் நீண்டதொரு பயணம் நடத்தினார்கள். சுமார் எண் ணாயிரம்மைல் நீளமுள்ளபயணம்இரண்டுஆண்டுகள் நடந் திருக்கிறார்கள். ஆண்கள்-பெண்கள் வயோதிகர்கள்-- குழந்தைகள். கொள்கைக்காக லட்சியத்துக்காக கொடு மைகள் பலவற்றை குளிர்ந்தகண்களுடன் ஏற்றுக்கொண் டார்கள். அந்த வழிநடைப் பயணத்தில் கர்ப்பவதிகள் பலர்! சுமார் எட்டுக்குழந்தைகள் பிறந்திருக்கின்றன. கொடுமை பின்தொடரச் செல்கிறவர்களுக்கு குழந்தை வளர்க்க நேரமேது? வசதியேது? வாய்ப்பேச்சு ஏது? குழந் தைகளை வழியில் கண்ட விவசாயிகளிடம் ஒப்புவித்து விட்டுப் போனார்களாம்! அப்படி ஒப்புவிக்கப்பட்டு மீண்டும் அந்தத் தாயாரால் பார்க்கப்படாத நிலையடைந்த குழந்தைகளில் ஒன்று இன் றைய சீனாவின் தலைவன் மாசேதுங்கின் பெண்குழந்தையு மொன்றாம். மாசேதுங் அன்று, ஒரு சிப்பாய்போல, இன்று சீனாவின் குரலே அவன்!