உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேத்தூர் கூத்தன் முல்லைக் கொல்லை அன்புள்ள தலைவர் அவர்களே ! தோழர்களே ! தாய் மார்களே ! மாற்றுக் கட்சிநண்பர்களே ! உங்கள் அனைவ ருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பர திராவிடத்திலிருந்து உங்களைக் காண வந்திருக்கும் நாங்கள் நால்வரும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர். சம்பந்தர் பரம்பரையினரல்ல. ராமன், லட்சுமணன், தன், சத்துருக்கனின் பரம்பரையினருமல்ல. தி. மு. க.வின் தூதுவர்களான நாங்கள் பெரியாரின் பூந்தோட்டத்திலே பூத்த மலர்களாகி அண்ணாவால் கட்டப்பட்ட கொள்கை மாலையிலுள்ள நான்கு மலர்கள். நேற்று முதல் உங்களைக் காண பூரிப்படைகிறேன். பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன். ஆனால் வேதனையும் பிறக்கிறது நண்பர்களே ! முத்துக் கடலும். முல்லைக் கொல்லையும் நிறைந்த நாட்டிலே யிருந்து வாழமுடியாமல் நீங்கள் எல்லாம் விரட்டப்பட்ட வர்கள் என என எண்ணும்போது விழியிலே நீர் வழியா' லிருக்குமா ?......