உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டின் இயற்கை ஙக புடைய வேறொரு பொருளை இயைத்துச் சொல்லல் வேண்டுவது நேருமாயின், அப்பொருளின்பங்கெடாமல் இடன் அறிந்து அதனைப் பிணைப்பது நல்லிசைப் புலவ ரிடத்துக் காணப்படும் அரிய வினைத்திறனா மென்பது அறியற்பாற்று. இவ் வரிய வினைத்திறன் நப்பூதனார் இயற்றிய இச்செய்யுளின்கண் ஆழ்ந்தமைந்து விளங்கிக் கிடக்கின்றது. முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றுங் கூறி முடித்தபின், அதனோடு இயைபுடைய அரசன் போர் மேற் செல்வதான வஞ்சியைக் கூறுவராயிற், கற்பவர்க் குப்,பின்ஒட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டலிற் கருத்து ஊன்றாமையே யன்றி, இருவேறு ஒழுக்கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கே உரிய முல்லை என்னும் பெயர் மட்டுமே சூட்டிய குற்ற மும் உண்டாம். அவ்வாறன்றி முல்லைப் பொருளுக்கு நடுவே எங்கேனும் ஓரிடத்திற் பொருத்தமின்றி அவ் வஞ்சிப் பொருளை மாட்டிவிடினுங் கற்போர் உணர்வு இளைப்படையுமாகலின் அதுவுங்குற்றமேயாகும். இனி, இக்குற்றமெல்லாம் அணுகாமல், இணங்கப் பொருத்து மிடந்தான் யாதோவெனிற் கூறுதும். எடுத்துச்சொல்லப் படும் முதன்மைப்பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக் கொண்டு ஓரிடத்திற் கூடிநின்று, கற்பார்க்கு 'இனி இஃது எங்ஙனம் முடியும்! எங்ஙனம் முடியும்!' என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங்கற்றுத் துறைபோகும் வண்ணம் அப் பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிறபொருளை இணைப்பதற்கு இசைவான இடுக்கு வெளியாம் என்க.