உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டு கூரு பெருங் காப்பியங்களும் இத்தகைய பெரும் பாட் டுக்களும் இயற்றுகின்ற பெரும்புலவர் இவ்வாறு அகன்று பொருள் முடிய வைத்தல் உயர்ச்சி யடைந்த எல்லா மொழிகளிலுங் காணப்படும். ஆங்கிலமொழியில் நல்லி சைப் புலவரான மில்டன் (Milton) என்பவரும் இவ் வாறே தம்முடைய செய்யுட்களில் அகன்று பொருள் முடியவைத்தல் கண்டுகொள்க. முல்லைப்பாட்டின்மேல் நச்சினார்க்கினியருரை இனி, இதுவே 'மாட்டு' என்னுஞ் செய்யுளுறுப் பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப்பொருள் இதுவாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யு ளில் இடையற்று ஒழுகும் பொருள்ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய்,ஓர் அடியில் ஒரு சொல்லையுங் தொலை விற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுங் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரி யர், சேனாவரையர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மா ராதல், பின்னே யிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழு தக் கண்டிலம். மேலும், நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள்சொல்லு முறை