உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு கள அற்றாயின், மிக்க செந்தமிழ்நூற் புலமையும் நுணு கிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இணங் காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வட மொழியில் இங்கனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒருபக்கமும் உரை ஒருபக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னேயிருந்த நச் சினார்க்கினியர், வடமொழியில் அவர் எழுதிய உரை களைப் பன்முறைபார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப்புகுந்து தமிழ்ச்செய்யுள் வழக்கின் வாம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாக்தசூத்திரத்திற்குச் சங் கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச் சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலா வுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருப்பிய ஆங்கிலமொழி பெயர்ப்பானும் உணர்க. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்து மிடங்களிலெல்லாம் ஏற்றுக்கோடற் பாலதேயாம் என்ப தும், அரிய பெரிய பழந்தமிழ்நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஒரோ விடங்களில் நலிந்துரை எழுதுதல்பற்றி இகழப்படுவா ரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்துகின்றாம். இனி இம் முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரை யின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேறொரு புத்துரை பின்னர் எழுதுகின்றாம்; அங்கு அதனைக் கண்டுகொள்க. பாட்டின் வரலாறு இனித், திருமுருகாற்றுப்படை முதலான பாட் டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்