பக்கம்:முல்லை கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த காத்தபெருமாள் பிள்ளை முன்னாலிருந்த வெற்றிலையில் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து அழுத்தினார். - திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டு என்ற புனித பூமியில். பிரபஞ்சத்து மானிட வர்க்கத்துக்கு ஒரு பொருட்காட்சி வைத்த மாதிரி கசா முசா வென்று கும்பல் கூடியிருந்தது. ஆலங்குளத்துக்கு அடுத்த பஸ் ராத்திரி எட்டரை மணிக்கு என்று புழுதி படிந்த போர்டு தெரிவித்தது. சிமிண்ட் பெஞ்சில் துண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்தார் கா. பெ. பிள்ளை. பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் சுருட்டு வாங்கிக்கொண்டிருந்த 'ஆனை முழுங்கி ஆவுடை. நாயகம் ஒரு புது சகாப்தத்தின் தூதனாக பிள்ளையின் கண்ணில் தோன்றினான். அவர் மூளை விருவிரு வென்று பேய் வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. 'தம்பியோவ்!-சிங்கப்பூர்த் தம்பி, என்ன கூப்பிடுதது. கேக்கலியா? சிங்கப்பூர்த் தம்பி திரும்பிப் பார்த்தான் . "நீங்களும் ஊருக்குப் புறப்பட்டு வாரீகளா?...... என்ன போங்க நான் சொன்னதை கொஞ்சங் கூட காதிலேயே வாங்காம போயிட்டீங்க. பொண் மக்களுக்குத் தான் நாலு காசு சேத்துவச்சா வேண்டாமிண்ணா இருக்கும் தேடி வாரலச்சுமியைத் தள்ளுத ஆசாமி ஒங்களைத்தான் பார்த்திருக்கேன்' என்று தன் மனக்குறையை வெளியிட்ட படி சுருட்டைப் பற்றவைத்தான் ஆவுடை நாயகம். லக்ஷம் ரூபாய்வரை ஒரே வாரத்தில் அமுக்கிவிடக் கூடிய ஒரு அணுகுண்டு வழியை, தான் கண்டுபிடித் திருப்பதாக ஆனை முழுங்கி இரண்டு நாட்களுக்கு முன் காத்தபெருமாள் பிள்ளையிடம் ரகசியமாகத் தெரி வித்தான். அப்பொழுது பிள்ளை கொஞ்சமும் ஆவல் காட்டவில்லை. பாரமுகமாக அசட்டை செய்து விட்டு 'எனக்கென்ன புள்ளையா குட்டியா? இந்த யம கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/56&oldid=881581" இலிருந்து மீள்விக்கப்பட்டது