பக்கம்:முல்லை கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கிடந்திக. இன்னைக்கி புருஷனுக்கு அக்கரையா கறி யெடுத்துப் போடு தியே என்ன இருந்தாலும் புருஷன் கிறது தெரியாமலா இருக்கு?' என்று கிண்டலாகக் கேட்டாலும் "ஆமாத்தா' என்று சலிப்பதுபோல் காட்டி தன்னுள் சிரித்துக்கொள்ளும் சுபாவமுடையவள். பாப்பாத்தி, தன் புருஷனைப்பற்றி அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. எனினும் அன்று காலையில் பக்கிரிசாமி முறைத்துக் கொண்டு, சாப்பிடாமல் கொள்ளாமல் போனது என்னவோ போலிருந்தது. கொஞ்சம் கிராக்கி பண்ணலாமே என்று நினைத்தாள், ஆனால் வண்டி தடம் மாறிவிட்டது. காலையில் கோபித்துக் கொண்டு போனவர் ராத்திரி வருவாரா என்ற சந்தேகம் அவளுக்கு வந்தாலும் வராவிட்டாலும் சோற்றை ஆக்கி வைப்போம் என்று நினைத்தாள். இசக்கியிடம் கூட அன்று நல்லபடியாய் நடந்து கொள்ள முடியவில்லை அவளால் பக்கிரிசாமி வந்தால் வாய் கொடுத்துப் பேசக்கூடாது என்று நினைத் தாள். பழைய குறும்பின் குறுகுறுப்பு. மாலைக் கருக்கலில் சோற்றை வடித்து இறைக்கி விட்டு, நம்பிக்கையற்றுப்போய் வாசல் நடையில் வந்து நின்றாள். ஆனால், எதிர்பாராத விதமாக, தெரு மூலையில், கொத்தனார்வாள் கையில் உபகரணச் சுமையோடு உலா வருவது தெரிந்தது. உடனே தன்னுடைய சுயமரியாதைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற சிந்தனை அவளைவீட்டுக்குள்ளே தள்ளிக் கொண்டு போயிற்று. ஆனால், உயரமான சாரத்தில் ஏறிச் செல்லும் பெண்களின் லீலைகளையும் தீகாரண்ய மாக அளந்து விடும் அவர் கண்கள் பாப்பாத்தி உள்ளே நுழைவதையும் கண்டு விட்டது. தன்னுள் சிரித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/76&oldid=881625" இலிருந்து மீள்விக்கப்பட்டது