பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

இக்களவு ஒளிவு மறைவாய் நிகழ்வதாகலின் அச்சம் தலைகீட்டிக்கொண்டே இருக்கும். எனவே, விரைந்து அக் களவை நீக்கித் திருமணம் செய்துகொண்டு அச்சமில்லா இன்பவாழ்வு வாழத் துடிப்பர்.

கன்னியின் களவு ஒழுக்கம் அவளுடன் அணுக்கமாகப் பழகும் அவளது தோழிக்கு முதலில் தெரியும். அவள் செவிலித் தாய்க்கு அறிவிப்பாள். அவள் பெற்ற தாய்க்கு அறிவிப்பாள். அவள் குறிப்பாகத் தந்தைக்கும் தமையன. ருக்கும் அறிவிப்பாள். பெற்ருேர் ஏற்றுக்கொள்ளின் முறைப்படி சான்ருேர் முன்னிலையில் முல்லே குட்டி வாழ்த்தை வழங்கி இல்லறத்திற் புகுத்துவர்.

சிலபோதில் பகைமையாலோ இந்தச் சிறு குட்டி நம்மை மீறி வெளியே சென்ருளோ என்னும் சினத்தாலோ மறுத்துப் 'பொங்குவர்; சீறுவர். பெற்ருே ரது மாறுபாட்டை அறிந்த குமரன் குமரியை வேற்று ஊருக்கு இரவோடு இரவாக இட்டுச் செல்வான். அவளும் இசைந்து உடன் போவாள். இஃது "உடன் போக்கு" எனப்பட்டது. உடன் போனவர் சென்ற ஊரிலோ மீண்டுவந்து குமரன் இல்லத்திலோ திருமணம் புரிந்துகொள்வர். இது பெற்ருேர் கொடுக்காமல் தாமே புரிந்துகொள்ளும் திருமணம். இது களவுத் திருமணம் எனப்படும்.

இதனே,

28 "கொடுப்போரின்றியும் கரண முண்டே

- புணர்ந்து உடன்போகிய காலை யான” - எனத் தொல் காப்பியம் குறிக்கின்றது. இது சிறுபான்மையாக நிகழ்வது

என்பதைக் "கொடுப்போர் இன்றியும்" என்பதிலுள்ள 'உம்'

குறிக்கின்றது.

ब्रह தொல் : பொருள் : 141