பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

சிலப்பதிகாரக் காலம் வடவர் மரபும் வடமொழியும் தடையின்றிப் புகுந்து காலூன்றத் தொடங்கிய காலம். இக்காலத்திலேயே கெல்லும் முல்லையும் கலந்து தூவப்பட்ட மரபு அருகத் தொடங்கியது போலும்.

சிலம்புக்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் காட்டும் .திருமணங்கள் படிப்படியாகக் கரணங்களைப் பெருக்கிக் கொண்ட வரலாற்றைத்தான் படைக்கின்றன.

ஒரு மணமகள். வாழ்நாளெல்லாம் அவள் மணமகளா கவே திகழ்ந்தவள். கனவுலகிலும் மணமகள்; கனவுலகிலும் மணமகள். அவள்கொண்ட திருமணம் கனவுலகத்தில், அக் கனவுத் திருமணத்தை அவளே பாடிக் களித்தாள் : தன் தோழியிடம் பாடிக் களித்தாள்:

  • "பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்

தோரணம் நாட்டக் களுக்கண்டேன் தோழிநான்" "மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் களுக்கண்டேன் தோழிநான்" "காப்புநாண் கட்டக் களுக்கண்டேன் தோழி.நான்" "தீவலஞ் செய்யக் களுக்கண்டேன் தோழிகான்' "அம்மி மிதிக்கக் களுக்கண்டேன் தோழிநான்" "பொரிமுகந் தட்டக் களுக்கண்டேன் தோழிகான்" -பாடிக் களித்தவள் வைணவப் பெருமகள் ஆண்டாள் காச்சியார். "வாரணம் ஆயிரம்" என்று தொடங்கும் இப்பத்துப் பாடல் களிலும் திருமணக்காட்சியே விளங்குகின்றது. ஆண்டாளது பாடல் திருமணச் சடங்கில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. "காப்பு கயறு கட்டல்", "அம்மி மிதித்தல்", "பொரிமுகந்து அட்டல்" ஆகியவை முளேத்தவற்றை அறிகின் குே ம் . ஆண்டாள் நாச்சி தன் காலத்தில் காட்டில் 'கிகழ்ந்த வழக் கையே கொண்டு காட்டினுள்.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : நாச்சியார் திருமொழி : "வாரணமாயிரம் ; 1, 3, 4; 7, 8, 9,