பக்கம்:முல்லை மணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதினுளே சிதை 95

ஏற்றப்பாட்டு ஒன்றில், சீதை இராவணன் உரு வத்தை எழுதியதாக வருகிறது. அவள் இலங்கையின் அழகை எழுதி, இராவணன் அழகையும் எழுதினுளாம்!

எழுதினுளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை-அந்த ராட்சசர் குணத்தை; எழுதிஒப்ப மிட்டாள் இளங்கொடியாள் சீதை; படித்துஒப்ப மிட்டாள் பசுங்கிளியாள் மாது; ராவணன் அழகை-அந்த ராட்சசர் பிறப்பை, எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ளவள் சீதை.

2

இப்படி ஒரு விசித்திரமான கற்பனை யாருக்கோ தோன்றிக் கதையாக கடந்து நாடோடிப் பாடலில் ஏறி விட்டது. இந்தக் கதைக்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ என்று ஆராய்ந்தேன். எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் இராமாயணத்தில், பிறவற்றில் காணுத புதிய செய்திகள் இருக்கின்றன. அந்த முறையில் இந்தக் கதையின் கரு எதிலேனும் இருத்தல் கூடுமோ என்று பல புலவர்களே விசாரித்தேன்.

கடைசியில் புலன் அகப்பட்டது: வங்கமொழியில் சந்திராவதி என்னும் பெண்மணி பாடியுள்ள இராமா யணத்தில் இப்படி ஒரு வரலாறு வருகிறதாம்.

சந்திராவதி கி. பி. 16, 17-ஆம் நூற்ருண்டில் வாழ்க் தவள். சந்திராவதி ராமாயணம் சிறந்த இலக்கிய நடை யில் அமையாவிட்டாலும், பெண்களுக்கும் விளங்கும் தெளிவான நடையில் இருக்கிறது. இந்த இராமாயணத்தில் சீதை இராவணன் உருவை எழுதிய கதை வருகிறது.

心 ★

1. இந்தச் செய்தியைச் சொன்னவர் என் அன்பர் பூ த. நா. ளேனுபகி. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/101&oldid=619715" இலிருந்து மீள்விக்கப்பட்டது