பக்கம்:முல்லை மணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா 13t

அவளுடைய அன்னேயும் தன் வீட்டுக் கதவை அடைத்து வைக்கத் தீர்மானிக்கிருள். ஆனால், அந்த மட மங்கை சற்றே துணிவுன்டயவள்.

தாய் கதவை அடைத்துவிட்டு உள்ளே போய் ஏதோ வேலே பார்த்தாள். மகள் மெல்ல வந்து கதவைத் திறந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து அன்னே வந்து பார்த் தாள். கதவு திறந்திருப்பது கண்டு மறுபடியும் அடைத்துத் தாழிட்டாள். மறு முறையும் மகள் அதைத் திறந்து விட்டாள்.

தாய்க்கு மகளேச் சினக்க மனம் இல்லை. தன் சினத் தைக் கதவின்மேல் காட்டினுள்; மீண்டும் கோபத்தோடு அதை அடைத்தாள். மகள் மீண்டும் அவள் போனவுடனே திறந்து விட்டாள். -

பழங் காலத்தில் கதவின் கிலேயோடு இரண்டு ஒரத்தின் இரு முனேயிலும் இணைந்த குடுமிகள் இருக்கும், அவற்றை மேலும் கீழும் உள்ள துளைகளில் பொருத்தி யிருப்பார்கள். தாயும் மகளும் அடைப்பதும் திறப்பது மாக இருப்பதனால் அந்தக் கதவின் குடுமிகள் தேய்ந்து போகின்றனவாம். - -

சேரமான் உலா வரும் வீதியில் இப்படிக் குடுமி தேய்ந்த கதவுகள் பல உண்டு என்று புலவர் பாடுகிருர்.

தாயர் அடைப்ப, மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே!-ஆய்மலர் வண்டுலாஅம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு. -: - (ஆராய்ந்த மலரினல் கட்டியதும் வண்டுகள் வந்து கிரிவது மாகிய கண்ணியை உடையவன், வலிமையைப் பெற்ற குதிரை பூட்டிய தேரையுடையவளுகிய சேரனேக் கண்டு, மக்கள் உலவுகிற வீதியிலுள்ள கதவுகள் தாய்மார்கள் அடைக்கவும் அவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/137&oldid=619752" இலிருந்து மீள்விக்கப்பட்டது