பக்கம்:முல்லை மணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முல்லை மணம்

முருகனைப் பற்றிய பல செய்திகள் சிலப்பதிகார காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் காட்டில் வழங்கி வந்திருக் கின்றன. முருகன் வேலை ஏந்தியிருப்பவன் ஆறுமுகங் களும் பன்னிரண்டு கரங்களும் செறிந்த தோளும் உடை யவன்; பிணிமுகமென்னும் யானையும் மயிலும் ஊர்பவன்; கடம்பமாலை அணிபவன்; ஆலமர் செல்வனகிய சிவபிரா னுக்குப் புதல்வன்; மலேமகளுக்கு மகன்; சரவணப் பொய் கையில் அறுவர் பாலே உண்டான்; கிரெளஞ்சாசுரனே அழித்தான்; சூரணுகிய மாமரத்தைக் கொன்ருன். வள்ளி யெம்பெருமாட்டியை மணந்தவன். அப்பிராட்டி குறவர் குலத்தில் வளர்ந்தவள். அவனுக்குரிய தலங்களின் பெயர் களைக் காண்கிருேம்.

கண்ணகியினுடைய வரலாறுகளும் இதில் வருகின் றன. அவள் மதுரையைத் தன் 5கில் ஒன்ருல் எரித்த தையும் தேவர்கள் கோவலனேடு வந்து அவளே விமானத் தில் ஏற்றிச் சென்றதையும் இந்தக் காதை குறிக்கிறது.

பின்னே சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரில் கோயில் எடுத்து வழிபாடு செய்வதற்கு முன்பே, குறிஞ்சி கில மக்கள் கண்ணகியின் தெய்வத் தன்மையை உணர்ந்து அவளே வழிபட்ட வரலாற்றைச் சொல்வது குன்றக் குரவை என்னும் பகுதி. சேர மன்னன் கோயில் எடுப்ப தற்குக் காரணமே, மலைவளம் காணவந்த இடத்தில் மலே காட்டுக் குறவர் தாம் கண்ட அற்புதக் காட்சியை அரச லுக்கு உரைத்ததே யாகும். ஆதலின் அவர்கள் பத்தினித் தெய்வத்தைத் தாம் வழிபட்டதன்றிப் பல மன்னர்களும் பிறரும் வழிபடுவதற்கு வழி கோவியவர்களும் ஆனர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/146&oldid=619761" இலிருந்து மீள்விக்கப்பட்டது