பக்கம்:முல்லை மணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பிடிக்கத் தாதி உண்டு 41

எழில் குலுங்கும் ஊர். திரிபுரத்தை எரித்த வில்லாளன், கயிலாய மலையாளன் சேரும் கோயில் அங்கே இருக் கிறது. -

நீர்வளமும் கிலவளமும் கிறைந்த ஊர் அல்லவா? நெல்லும் கரும்பும் கிமிர்ந்து வளர்கின்றன. கரும்புத் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிருர் சம்பந்தப் பெருமான். எங்கே பார்த்தாலும் கரும்புகள் தளதள வென்று வளர்ந்திருக்கின்றன. ஒரு கவலையும் இன்றி வளரும் செல்லப் பிள்ளைகள் போல அவை கிற்கின்றன.

' கவலையில்லாமல் இவை கண் வளர்கின்றதைப் பாருங்கள்" என்கிருர் சம்பந்தர். கண் என்பது கணுவுக் குப் பெயர். கரும்பு வளர வளரக் கணுவும் வளரும். கணுவின் வளர்ச்சியே கரும்பின் வளர்ச்சி என்று கூடச் சொல்லலாம். கணு முற்றினல் கரும்பு முற்றும். கரும்பு கண் வளர்கிறது: கணு வளர்ந்ததல்ை வளர்ச்சி பெறு கிறது. அதோடு கவலையில்லாமல் சுகமாகத் துரங்குகிறது. கண் வளர்தல் என்பது துரங்குவதற்கும் பெயர்.

எங்கேயோ சிறு குன்றும் அதில் சோலேயும் உள்ளன. அங்கே குயில்கள் இருந்து கூவுகின்றன. குழந்தையைத் துரங்கப்பண்ணவேண்டுமானல் தாலாட்டுப் பாடவேண்டும் அல்லவா? இங்கே கரும்பு கண் வளர்வதற்காகக் குன் றெல்லாம் குயில்கள் கூவுகின்றன. பாட்டு மாத்திரம் போதாது. காலே வருடில்ை உடனே தாக்கம் வரும். இந்தச் செல்வக் குழந்தையை அடிவருட யார் இருக்கிருர் மிக மிக மென்மையான கரமுடையவர்களாக இருந்தால் சுகமாக இருக்கும். இங்கே அப்படி ஒருவர் வருகிருர். அழகுக் குழக் தையின் கால வருடுபவர் அழுக்குக் கையோடு இருக்க லாமா ? அவர் கை மணக்கிறது. மலர்களிலுள்ள மணம் அந்தக் கையில் மணக்கிறது. அவர் அடி வருடுகிரு.ர். с

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/47&oldid=619659" இலிருந்து மீள்விக்கப்பட்டது