பக்கம்:முல்லை மணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

இலக்கியத்தைச் சுவைக்கப் பல வழிகள் உண்டு. பெரிய காப்பியங்களைப் படித்து அவற்றின் கட்டுக்கோப் பழகையும் பாத்திரச் சிறப்பையும் தெரிந்துகொள்வதனல் மிகப் பெரிய இன்பம் உண்டாகும். தனியாகச் சில பாடல் களே ஆழ்ந்து பயின்று சுவை காணுவது ஒரு முறை. இதில் வரும் இன்பம் மிகப் பெரிது என்று கூற இயலாவிட்டாலும் ஓரளவுக்கு இன்பம் உண்டாகிறது. சொற்சுவை பொருட் சுவையை நுகர அத்தகைய பாடல்களும் கருவியாக இருக்கும்.

இந்த நூலிலுள்ள கட்டுரைகளில் பல, சில பாடல்களே நுகர்ந்து சுவைத்ததன் விளைவாக எழுந்தவை. சில கட்டுரை கள் இலக்கியங்களினுடே காணக் கிடைக்கும் அரிய கருத் துக்களேச் சொல்பவை. வீரம், காதல், தத்துவம் முதலிய பல துறைகளில் அமைந்த பாடல்களே இக் கட்டுரைகளினி டையே காணலாம். அவ்வப்போது பல பத்திரிகைகளில் எழுதியவை இவை. தமிழ் இலக்கியத்தில் நேரே புகும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு இவை சுவை தருமென்று நம்பு கிறேன். இவற்றில் வரும் பாடல்களே உணர்ந்து சுவை கண்டவர்கள் மூல நூல்களேயே படிக்கும் ஆர்வத்தைப் பெற வேண்டும் என்பது என் கருத்து. -

கி. வா. ஜகந்நாதன்

8–1—59

" காந்தமல்ே : l கல்யாண நகர்

சென்னே-28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/5&oldid=619580" இலிருந்து மீள்விக்கப்பட்டது