பக்கம்:முல்லை மணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது 49

கோலங் கொள்வான். இப்போது வசந்தன் வந்துவிட் டான். படைகள் யாவும் கோலம் கொள்ளும். அதை யாவருக்கும் அறிவிக்கும் காகளம் குயில். அந்தக் குயிலே ஊதும்படிச் செய்யத் தென்றல் தூதுவகைச் செல்கிறது. 'கம் மன்னனுடைய தோழனுகிய வசந்தன் வந்துவிட் டான். இனிமேல் காமன் படை கோலம் கொள்ளும். நீ இதை யாவருக்கும் அறிவிப்பாயாக' என்று சொல்கிறதாம். உடனே குயிலோன், குரல் எழுப்புகிருன்.

அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணே யாகிய இன்னிள வேனில் வந்தனன் இவண் என வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் துTதன் இசைத்தனன் ஆதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனே புகர் அறு கோலம் கொள்ளும்என் பதுபோல் கொடிமிடை சோலேக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற. (இவண் - இங்கே, பயந்த பெற்ற, இளங்கால் - தென்றல்; மகா வெல்கொடி மைந்தன் - மன்மதன்; புகர் அறு - குற்றம் அற்ற; மிடை - நெருங்கிய; படை உள்படுவோன் . படையில் இருந்து வேலை செய்பவன்.)

கோவலனும் மாதவியும் கவுந்தியடிகளோடு வடக்கே யிருக்து தெற்கே போய்க் கொண்டிருந்தார்கள். மதுரைக்கு அண்மையில் ஓரிடத்துக்கு வந்தபோது அங்குள்ளவர்க ளிடம், 'மதுரை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று கேட்டான் கோவலன். அவர்கள், "இதோ, பக்கத் தில்தான் இருக்கிறது' என்று சொன்னர்கள். அதற்குக் காரணமும் காட்டினர்கள். "இதோ, இந்தத் தென்றற் காற்றே மதுரை அருகில் இருக்கிறது என்று சொல்ல

, சிலப்பதிகாரம், 8:5-13, -

(op, to-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/55&oldid=619668" இலிருந்து மீள்விக்கப்பட்டது