பக்கம்:முல்லை மணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரைத் துாது 55

தீமையை ஆராயாமல், "ஆமாம் !" போடும் பொம்மை களாக வாழ்ந்தார்கள். இன்னும் சிலர் அரசனைத் தீய வழியில் புகுத்தி, அதனுல் தாம் நன்மை பெற்ருர்கள். அவர்கள் தமக்கு அரசனிடம் இருக்கும் செல்வாக்கினலும் மிடுக்கினலும் யாவரையும் அச்சுறுத்தி, அரசனே அணுக வொட்டாமல் செய்தார்கள்.

இவ்வாறு தாமும் ஒழுக்கம் பிறழ்ந்து அரசனையும் கெடுக்கும் சான்ருேர் பலரைப் பற்றிய செய்திகளை கரி வெரூஉத் தலையார் உணர்ந்தார். அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும் என்று எண்ணினர். குறிப்பிட்டு யாரை யென்று கூறுவது? பொதுவாகவே கூறித் தமிழ் நாட்டு மக்களுக்கு அந்தப் பாடலே வழங்கினால், அரசரும் பிறரும் உண்மையை உணரட்டும் என்பது அவர் நினைவு. ஒரு கவி பாடினர். அந்தச் சான்ருேர்களைப் பார்த்து, "ஐயன்மீர், நீங்கள் காட்டுக்கு நல்லது ஒன்றும் செய்யாவிட்டாலும் திங்கு செய்யாமல் சும்மா இருந்தாலே போதும் ' என்று கூறுவதைப் போலப் பாடினர்.

இப்போது உங்கள் மனம் போலத் திங்குகளைச் செய்துவிட்டால் நாளேக்குக் காலன் வருவானே ! நீங்கள் இன்ன இன்ன தீங்குகளைச் செய்யவில்லையா ? என்று கணக்குக் காட்டித் தன் கைப்பாசத்தை உங்கள் மேல் வீசுவானே ! அப்போது நீங்கள், ஐயோ! நல்லது செய் யாமற் போளுேமே!’ என்று வருக்துவீர்கள். அதற்கு இடம் இல்லாமல் இப்போதே ஒழுங்காக இருங்கள். நல்லது செய்யும் ஆற்றல் உங்களுக்கு இல்லாவிட்டாலும், பொல்லாததைச் செய்வதை விட்டு விடுங்கள். இதல்ை எல்லாருமே மகிழ்ச்சியை அடைவார்கள். உங்களுக்கு நல்ல வழியும் அதுதான்” என்ற பொருளே அமைத்துப் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/61&oldid=619674" இலிருந்து மீள்விக்கப்பட்டது