பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தமிழர் தம் பெரும் இலக்கியச் செல்வம் தங்கத் தமிழான சங்கத் தமிழே. பாட்டும் தொகையுமென விரிந்து கிடக்கும் சங்க இலக்கியத்தில் தோய்ந்து இலக்கிய இன்பத்தைத் துய்க்க விரும்பாதவர் யாரும் இல்லையெனக் கூறலாம். -

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சங்க நூல்கள் உரையுடன் வெளிவந்து மக்களை மகிழ்வித்தன. சங்க நூல்களுக்கு வாய்த்த பழம்பெரும் உரையாசிரியர்களின் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த யரந்து விரிந்த உரைகள் முறையாகத் தமிழ் இலக்கியம் பயில் வார்க்கு மட்டுமே பயன்படுவனவாம்:

பழைய உரையாசிரியர்களின் உரைகள் சில இடங் களில் மூல நூலுடன் ஒத்து அமையாதும் நின்றன: எனவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சங்க நூல்கள் புதிய உரையாசிரியர்களின் உரையைக் கண்டன. தனித்தமிழ்த்தந்தை மறைத்திரு மறைமலை யடிகளார் முல்லைப்பாட்டிற்கும் பட்டினப்பாலைக்கும் புதிய ஆராச்சியுரை இயற்றினார். ந. மு. வேங்கட சாமி நாட்டார், உரை வேந்தர் ஒளவை. அ. துரைசாமிப் பிள்ளை, பெருமழைப் புலவர் பொ. வே. சோம சுந்தரனார் போன்ற பேருரைகாரர்களும் சங்கப் பாடல் களுக்குப் புத்துரை கண்டனர். வரிக்குவரி, உரை யெழுதாது மூலத்தின் செம்பொருளை எளிய நடையில் இனிய வகையில் படைத்து சங்கப் பாடல்களை