பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

99

சிரமப்படுத்தாதீர்கள். அதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் இப்போது வந்தேன். ‘’

‘’இந்த பிலாஸபியை எல்லாம் ஏதாச்சும் கதையிலே சொல்லுங்க. ஜனங்க கைதட்டுவாங்க."

‘’கதையிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கைக்குப் பயன்படாத எதையும் கதையில் நான் சொல்லுவதில்லை. என்னைப் பொறுத்தவரை நல்லதை எங்கேயும், எதிலும், யாரிடமும், எப்போதும் சொல்றதுலே தப்பில்லேன்னு நினைக்கிறவன் நான்.‘’

"அப்படிநெனச்சுத்தான் காலணி அஸோஸியேஷன்லேருந்து என்ன வெளியேத்தச் சதி பண்ணினீங்கல்லே?"

‘’வீண் கற்பனை! அஸோஸியேஷன் மெம்பர்ஸ் உங்க மேலே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாங்க. நீங்க வெளியேறினிங்க. அப்பக்கூட உங்களை வெளியேத்தக் கூடாதுன்னு நானும் அந்தம்மாளும் முடிஞ்சவரை வாதாடிப் பார்த்தோம். யாரும் கேட்கலே, யானை தன் தலையிலேயே மண்ணே வாரிப் போட்டுக்கிட்ட மாதிரி நீங்களே உங்க எதிர் காலத்தைக் கெடுத்துக்கிட்டிங்க மிஸ்டர் கண்ணன். எங்களாலே எதுவும் நடக்கலே!‘’

‘’இதெல்லாம் சும்மாக் கதை விடறீங்க, உங்களைப் பத்தி நான் ரொம்ப நல்லாவே தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.‘’

‘’நிச்சயமா இல்லே மிஸ்டர் கண்ணன்! 'தூஷணம் ஞான ஹீனம்' பாங்க. துவேஷம் அறிவைக் கெடுத்துடறது. நல்லது கெட்டது பகுத்தறிய முடியாத துவேஷத்தாலே யாரையும், எதையும் ஒருத்தராலே சரியா அறிய முடியாது. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு உங்க மனசிலே தேங்கிப் போயிருக்கிற துவேஷம் சிறிது வடிஞ்சு விலகிப் போறப்போ நீங்க சரியா என்னைப் புரிஞ்சுப்பீங்க. அப்போ நான் யார் எப்படிப்பட்டவன்னு சரியா உங்களாலே கவனிச்சுப் பார்க்க