பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

101

.

அந்த முயற்சியும் பலிக்கவில்லை, கண்ணனுக்குக் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

சாதாரணமாக வெறும் நாட்டியம், துணை நடிகை என்ற நிலைகளிலிருந்து அம்மினி அம்மாளின் பெண்கள் எல்லாருக்குமே கதாநாயகி அந்தஸ்து வந்து லகரக் கணக்கில் பணம் குவிய ஆரம்பித்திருந்தது. அடையாறிலும், போயஸ் கார்டனிலும் வேறு இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டிய பின்பும் முதலில் குடியேறிய இந்த ஐயப்பன் நகர் வீடுதான் தனக்கும் பெண்களுக்கும் ராசி என்பதனால் இதிலேயே தொடர்ந்து வசித்து வந்தாள் அம்மிணி அம்மாள். பாகவதருக்கு நிறைய உதவிகள். அவரைத் தன் குடும்பத்துக்கே குரு ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடினாள் . இஞ்சிக்குடி பாகவதர்தான் அம்மிணி அம்மாளின் குழந்தைகளுக்கு அப்பா மாதிரி என்று குறும்பாகப் புலவர் மகிழ்மாறன், உண்மை விளம்பி போன்ற சில நண்பர்கள் ஒரு தினு சாகப் பொடி வைத்துப் பேசக்கூடச் செய்தார்கள். பாகவதரோ, அம்மிணி அம்மாளோ, அவள் அருமைப் பெண்களோ இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. யாராவது கேட்டால் அவளே, ஆமாம் என்னுடைய குழந்தைகளுக்கு அவர் அச்சன் மாதிரின்னே வச்சுக்கலாம். அதாவது ஞான பிதாவாக்கும்’-என்று தைரியமாகப் பதில் சொன்னாள். அதைக் கேட்டுச் சிணுங்கிக் கூசவில்லை.

அவள் பெண்கள் மிகமிக வசீகரமாகவும், கவர்ச்சி யாகவும் இருந்ததினால் திரையுலகில் அதிவேகமாக முன்னேறினார்கள். ஒரே ஒருத்தி மட்டும் எப்படியோ செக்ஸ் அணுகுண்டு' என்று பெயர் வாங்கிவிட்டாள். இதுபற்றி அம்மிணி அம்மாளே யாரோ கேட்டபோது, "எல்லாம் இந்தத் தமிழ்ப் பத்திரிகைக்காரன்மார் வச்ச பேருதானே? இவங்க மன விகாரத்தை இப்பிடிப் பேரு சூட்டினதிலேர்ந்து நீங்க புரிஞ்சுக்கணும். என்ட மோளை மேல எந்தத் தோஷமும் சொல்றத்துக்கில்லா'-என்று பதில் சொல்லியிருந்தாள்.

மு-7