பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

108


அம்மிணி அம்மாளின் பொன் குன்னம் வீட்டில் பாகவதருக்குத் தனி மரியாதை. அவர் உள்ளே நுழைந்து விட்டால் வேலைக்காரர்கள் முதல் வீட்டிலிருப்பவர்கள் வரை, “அ சாமி வந்திருக்கு'-என்று பவ்யமாக ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொள்வார்கள். சாமிக்கு அத்தனை மரியாதை அந்த வீட்டில், ஒரு பிரபல மலையாள வாரப் பத்திரிகை "என் டெ அயல்கார்' (எனது பக்கத்து வீட்டுக்காரர்) என்ற தலைப்பில் சினிமா நட்சத்திரங்கள், முக்கியக் கலைஞர்கள், பிரமுகர்களுடைய பேட்டிகளே வெளியிட்டு வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களையும் அவர்களையும் தனித் தனியே பேட்டி காண்பது ரசமாயிருந்தது.

இதே வரிசையில் செக்ஸ் அணுகுண்டு நந்தினியின் பேட்டியும் வந்தது. இந்த மலையாளப் பத்திரிகை மிகவும் தந்திரமாகவும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் இரு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இப்படிச் செய்வதால் ஒருவர் என்ன சொல்லி யிருக்கிறார் என்பது இன்னொருவருக்குத் தெரியாது. அதனால் முற்றிலும் எதிர்பாராத அபிப்பிராயங்கள் கிடைப்பது உண்டு.

இந்தப் பத்திரிகை அதன் சென்னை நிருபரிடம் இவ் வேலையை ஒப்படைத்திருந்தது. நிருபர் தனித் தனியே செக்ஸ் அணுகுண்டு நந்தினி, கண்ணன, பாகவதர் ஆகிய மூவரையும் சந்தித்திருந்தார். கண்ணனை வீட்டில் சந்திக்காமல் விவரம் விசாரித்து அலுவலகத்துக்குப் போய்ச் சந்தித்த நிருபர் பெருத்த ஏமாற்றமடைந்தார்.கண்ணனுக்குத் தன் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி நல்லெண்ணம் இல்லை. திட்டினான். வசைமாரி பொழிந்தான் குறைகளச் சொன்னான். குற்றங்கள் சாட்டினான். "சரிங்க! நீங்க இப்ப சொன்னதைஎல்லாம் அப்படியே போட்டுக்கலாம் இல்லையா? இதுவரை யாரும் தங்க நெய்பரை'ப் பற்றி டோங்கா' இப்படிச் சோன்னதில்லை. உங்க இது ரொம்பப் புதுமையாக்