பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

முள்வேலிகள்


  • அப்படீன்னா...?" கொஞ்சம் பட்டை அடிச்சிட்டு உட்கார்ந்தாத்தான் இதெல்லாம் எழுத வரும்.'

அதுக்கென்ன? அதோ அந்தப் பிறையிலே இருக்கு! வேனுங்கற மட்டும் எடுத்து அடிச்சிக்க. புலவர் ரேஷனலிஸ்ட்- அதெல்லாம் அடி க்கமாட்டார்' என்றான் கண்ணன். நண்பன் பிறையைத் தேடிச் சென்றான்.

  • ஒகோ! நீ கூட இதெல்லாம் வீட்டிலேயே வைச் சிருக்கியா?'-என்று கேட்டபடியே பிறையைப் போய்ப் பார்த்துவிட்டு, அட போப்பா! நான் விபூதிப் பட்டை அடிக்க விபூதி கேட்கிறேன்னு நெஇனச்சிட்டியா? கேலிக் கூத்துத் தான்ப்பா...இந்தப் பட்டை அடிச்சா ஆஸ்தீக தர்மவர்த் திணிக்குத் தான் எழுத முடியும்! உண்மை விளம்பிக்கு எழுத முடியாது. நான் கேட்கிறது வேற பட்டை. ஒரு ஐம்பது ரூபாய் எடு! புலவர் முன்டிையே எட்கிட்டச் சொல்லிட்டாரு. அவருக்குப் பழக்கம் உண்டாம். தேறல் அருந்துதல் பழந் தமிழர் வழக்கம்’னு ஆய்வுக் கட்டுரையே எழுதியிருக்கிருறாராம் அவர்.'

கண்ணனுக்கு அப்போதுதான் அவர்கள் நெற்றியில் பட்டையடிக்க விபூதி கேட்கவில்லை. பட்டைச் சாராயம் கேட்கிறாகள் என்று புரிந்தது. கையில் இருந்ததைத் திரட்டி அவர்களுக்கு முப்பது ரூபாய் கொடுத்துத் தொலைக்க வேண்டியிருந்தது. -

"நாளேக்குக் காலையில் நீ ஆபீஸ் புறப்படறத்துக்குள்ளே ஸ்கிரிப்ட் உன் கைக்கு வந்து சேரும். பயப்படாதே"என்று கூறி விட்டுப் புலவருடன் நண்பன் கிளம்பிப் போனான். தெண்டத்துக்கு முப்பது ரூபாய்க்குச் சாராயம் வாங்கக் காசு கொடுத்தாவது இந்தப் பேட்டியைத் தரவேண்டியது தன்னளவில் அவசியம்தானா என்று கண்ணனுக்கு இப்போது மனத்துக்குள் தோன்றியது. மறுபடி மறுபடி நைப்பாசை காரணமாகப் புதுப் புது..வம்பில் தான் சிக்கிக் கொள்