பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

முள்வேலிகள்



போரில் இறங்கியிருப்பது அவனுக்கே நினைக்க நினைக்க வேடிக்கையாகத்தான் இருந்தது. ஒழுக்கமுள்ளவர்கள் அடுத்தவர்கள் ஒழுக்கம் பற்றிக் கவனிப்பதே இல்லை. அடுத்தவர்களின் ஒழுக்கத்தை அணு அனுவாகக் கவனித்து அதை விமரிசிப்பதையே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள் அதிலேயே தங்கள் சொந்த ஒழுக்கத்தைக் கோட்டைவிட்டு விடுகிறார்களோ என்றுகூட யோசித்தான் கண்ணன். மகிழ் மாறனுக்கும், உண்மை விளம்பிக்கும் பட்டை அடித்தால் தான் மோசமாக எழுத மூட் வருகிறது. சுயநினைவை மறக்காமல் மோசமாக எழுத வரமாட்டேனென்கிறது. அம்மிணி அம்மாள்-பாகவதர் ஆகியவர்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி விமரிசிக்க இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுகூட யோசித்தான் கண்ணன். மனம் போன போக்கில் அவனுடைய கட்டுக்கே அடங்காமல் அவனுடைய சிந்தனை எங்கெங்கோ போயிற்று.

16

சில நாட்களுக்குப் பின் தபாலில் அவனுக்கு அந்த

மலையாளப் பத்திரிகை வந்தது. கட்டுக்கடங்காத ஆவலுடன் காலனியிலிருந்த மலையாளமும் தமிழும் அறிந்த நண்பர் ஒருவரிடம் அதை எடுத்துச்சென்று தனக்குப் படித்துக்காண்பிக்கச் சொன்னான் புரியாததை மொழிபெயர்க்கச் சொன்னான். படிக்குமுன் அதில் தன் மனவியின் படத்தையும் பக்கத்து வீட்டு செக்ஸ் ராணியின் படத்தையும் சேர்த்துப் பார்த்ததில் அவனுக்கு ஒரே அதிர்ச்சி. பக்கத்து வீட்டைப் பற்றிக் கண்ணனின் திடுக்கிடும் தகவல்கள். குடிவெறியோடு: நள்ளிரவில் வந்து கதவைத் தட்டினார்களாம். பட்டுப் புடைவை விற்கும் பாகவதர்'-என்கிற மாதிரித் தலைப்புக் களுடன் அவன் கூறிய விவரங்களோடு அப்படியே இருந்தன. எதையும் மாற்றவில்லை. சொல்லியதைக் குறைக் கவோ குலைக்கவோ கூட இல்லை.