பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

முள்வேலிகள்


கவனித்து வந்தான்.கண்ணனின் வீடு-வீட்டு வசதி வாரியம் அவனிடம் எப்படி ஒப்படைத்ததோ-அப்படியே இருக்க அம்மிணி அம்மாவின் வீடு மட்டும் ஒரு மினி பங்களாவைப் போல் புதிதாக மாறி வளர்ந்து மின்னியது.பூந்தொட்டிகள்.சிறு தோட்டம்.நடுவாகப் பசும்புல்வெளி.கேரளாவில் அவளுடைய பூர்வீக ஊரின் பெயரையே.வீட்டின் பெயராக்கிப் 'பொன்குன்னம்' என்று ஒரு பக்கத்துத் தூணில் ஆங்கிலத்திலும் மறுபக்கத்துத் தூணில் மலையாளத்திலுமாகச் சலவைக் கல்லில் செதுக்கிப் பதித்திருந்தாள்.வீடு பளிச்சென்று ஸ்நோசெம் பூசிக் கொண்டு கம்பீரமாக நின்றது.தோட்டத்தின் எந்த மூலையிலும்.அழுக்கோ குப்பையோ இல்லை.

அதிகாலையில் பளிச்சென்று நீராடி ஈரக் கூந்தல் முதுகில் புரள நெற்றியில் சந்தனக்கீற்றுடன் திண்ணை முகப்பில் குத்து விளக்கு ஏற்றிவைத்து ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் சொல்லும் அம்மிணி அம்மாவைப் பார்த்தால் "இந்தப் பூனையும் இந்தப் பாலைக்குடிக்குமா?" என்று தான் கேள்விப்பட்டதை நினைத்துக்கொள்வான் கண்ணன்.அந்த வீட்டின்-மினுமினுப்பு, அழகு,சுத்தம் இவை எல்லாம் வேறு அவனுடைய எரிச்சலை அதிகமாகிவிட்டன. 'ஒழுங்கா முறையா உழைச்சுச் சம்பாதிச்ச பணமாயிருந்தா இப்பிடி ஸ்நோஸெம்மும் டிஸ்டெம்பரும் அடிச்சு மினுக்கமுடியாது.தாறுமாறாகச் சம்பாதிச்ச காசு எப்படி எப்படியோ செலவழியிது' -என்று தனக்குத்தானே பொருமினான் அவன்.

விட்டுவசதி வாரியம் அவர்களுக்குரிய நிலப்பரப்பையும் அந்த நிலப்பரப்பில் கட்டிய வீட்டையும் ஒதுக்கீடு செய்யும்