பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

முள்வேலிகள்


அம்மிணியம்மாள் அதைப் படித்துக் காட்டி விவரித்த போது சுகன்யாவுக்கு அதைக் கேட்கவே கூச்சமாயிருந்தது. குடும்ப கெளரவம் அது இது என்றெல்லாம் பேசுகிற தன் புருஷனாஅடுத்தவர்களைப் பற்றி இத்தனை கொச்சையாகவும் பச்சையாகவும் சொல்லியிருக்கிறான் என்று எண்ணியபோதே அவளுக்கு அருவருப்பாயிருந்தது.

அப்போது பாகவதரே மேலும் சொன்னர்: மலயாளத் தோட போகாம இது தமிழ் சினிமாப் பத்திரிகையிலேயும் வந்திருக்கு அம்மா! நாங்க அம்மிணிக்கு மிகவும் வேண்டிய ஒரு பெரிய வக்கீலக் கலந்து பேசினதிலே "இந்தப் பேட்டி ரொம்பத் தந்திரமான வார்த்தைகளில் கொடுக்கப்பட்டிருந் தாலும் நீங்க விரும்பினா இந்தப் பேட்டியைக் கொடுத்தவர் மேலும் பிரசுரித்த பத்திரிகைகள் மேலும் தலா ஒரு லட்ச ரூபாய்க்குக் கேரக்டர் அஸாஸிநேஷன்னு ஸூட் போட்டுக் கேஸை ஜெயிச்சுத் தரேன். சுப்ரீம் கோர்ட் வரை போனாலும் பரவாயில்லை. ஜெயிச்சுத் தர்றது என் பொறுப்பு'ன்னார். நானும் அம்மிணியும் உன்னைப் பத்தி நினைச்சோம். வீணா உனக்குச் சிரமம் குடுக்கப்பிடாதுன்னுதான் அதை நாங்க செய்யலே. முரடனான உன் புருஷன் பண்ணின தப்புக்காக உன்னைப் போல ஒரு நல்ல சுமங்கலி சிரமப்படக் கூடாதும்மா!'ட

'உங்களுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னோ அப்பா அம்மா மாதிரி! கெட்ட சகவாசத்தாலேதான் இவர் இப்படி ஆயிட்டாரு. சுபாவத்திலே இவர் கெட்டவர் இல்லே. சீக்கிரம் கடவுள் இவருக்கு நல்ல புத்தியைக் குடுக்கணும்'-என்று அவர்கள் முன் கண் கலங்கிக் கை கூப்பினாள் சுகன்யா. .

பாகவதர் அம்மிணி அம்மாள் இருவருமே அவளுடைய நல்லெண்ணத்திற்கு ஒரு குறையும் வராது என்று சொல்லி அவளை மனப்பூர்வமாக ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்கள்.