பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

முள்வேலிகள்



ஆனால் புலவர் அதைக் கவனிக்காதது போல் இருந்து விட்டார். மீண்டும் மீண்டும் கண்ணன் புலவரின் கவனத்தைக் கவர முயன்றது வீணாாயிற்று.

உண்மை விளம்பி பணத்துக்காக இப்படி என்றாவது ஒரு நாள் செய்யக்கூடும் என்று கண்ணன் அறிந்திருந்தான் . தன்மானம் அது இது என்று பேசிப் பெண் நாய்கள் ஜாக்கிரதை' என்று இதே வீட்டுச் சுவரில் தாரால் எழுதிய புலவரின் இந்தத் திடீர் மாற்றம்தான் கண்ணனால் எந்தவகை யிலும் ஜீரணிக்க முடியாதபடி இருந்தது.

வீட்டுக்குத் தேடிப் போயாவது புலவர் மகிழ்மாறனிடம் இதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு விடவேண்டும் என்று கண்ணன் துறுதுறுப்புக் கொண்டான். அப்போது எழுந்த ஆவல் மட்டும் அவனால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. இப்படி ஆட்களை நம்பி அக்கம்பக்கத்தாரைத் தான் பகைத்துக் கொண்டதுதான் பைத்தியக்காரத்தன மோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமோ என்று எண்ணி மனம் நொந்தான். இந்த இரண்டு காரியக் கோமாளிகளும் சகல விஷயங்களையும் நந்தினியிடம் சொல்லித் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்றுகூடத் திடீரென்று அவனுக்கு ஒருவகைப் பயமும் பதற்றமும் தற்காப்பு உணர்ச்சியும் கூட ஏற்பட்டன.

ஊர்வலம், மாலையணிவிப்பு, வாழ்த்தொலிகள் எல்லாம் ஒய்ந்து புலவர் வீடு திரும்பியிருப்பார் என்று கண்ணனுக்குத் தோன்றியபோது வெளியே தூறலாக இருந்த மழை பெரிதா கியிருந்தது. முதல் நாள் டெலிவிஷனில், நாளை வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். சில இடங்களில் இலேசான துாற்றல் இருக்கலாம்'-என்று கூறியிருந்தபோதே மறுநாள் அதற்கு நேர்மாறாகப் பலத்த மழை பெய்யும் என்பதைக் கண்ணன் தீர்மானமாய் முடிவு செய்திருந்தான்.