பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

முள்வேலிகள்



வந்தனர். புலவர் உடனே கண்ணனைக் கடிந்து கொள்ளத் தலைப்பட்டார்:

  • அதென்னங்க நீங்க அங்கேயே அவங்க விட்டு வாசல் லேயே என்னை ஜாடை பண்ணிக் கூப்பிடறீங்க? கொஞ்சங் கூடக் குறிப்பறிதல் இல்லாம நடந்துக்கறீங்களே? நீங்களும் அவங்களும் எதிரி. நான் அங்கேயே உங்களோட வந்து பேசினா. அவங்க என்னைப் பத்தி என்ன நெனப்பாங்க?"
  • அது சரி நீங்க எப்போது இப்படி நண்பரானிங்க? *மன்றம் ஒண்ணு ஸெட்அப் பண்றோம். கவனியுங்க'ன்னு போய் நீங்களே நந்தினி கிட்டப் போய் நின்னிங்களா?"

‘எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சது? கரெக்டா சொல்றீங்களே?’ என்றான் உண்மைவிளம்பி.

புலவர் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார் தரணி ஸ்டுடியோவில் அவங்களைப் போய்ப் பார்த்தோம். ஆப்பிள் ஜூஸ் குடுத்து உபசரிச்சு ரொம்பப் பண்பா நடந்துக் கிட்டாங்க.“மன்றம்’னு நாங்க பேச்சை எடுத்ததுமே, நல்லாச் செய்யுங்க! பணம் எவ்வளவு வேணும்?’னு நேரடியாவே வந்துட்டாங்க." - -

  • அடேடே! ரொம்ப லிபரலா இருக்கே? அப்புறம்?"
  • தமிழ்நாடு முழுவதும் கிளை அமைச்சு ஊரூரா உங்க படம் ரிலீஸாகிற தேதியிலே படப் பெட்டிக்குச் சூடம் காட்டி மாலை போட்டு ஊர்வலம் விடறோம். பேனர் கட்டறோம். மாமூலா உள்ள மத்ததும் செய்யறோம்ணோம்.'

பலே! ரொம்பத் தேறிட்டீங்க புலவரே! இந்தச் சூடம் காட்டறதுலே கூட இப்போ நம்பிக்கை வந்திடிச்சா உங்களுக்கு?’’ -

'வராமப் பின்னே? சாமி படத்துக்கா சூடம் காட்டறோம்? படப் பொட்டி க்குத்தானே காட்டப் போறோம்?

"சரி.மேலே சொல்லுங்க وه، ،