பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

முள்வேலிகள்



கீழே ஒரே தண்ணிர்ப் பிரவாகம் நகரில்"கிரவுண்ட் ஃப்ளோர் மட்டுமே உள்ள வீட்டுக்காரர்கள் எல்லாருமே இப்படி அங் கங்கே இருந்த மாடிகளில் அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும். அல்லது வேறு மேடான பகுதிகளுக்குக் குடி யேறியிருக்க வேண்டும். அல்லது கார்ப்பரேஷன் ஸ்கூல் களுக்குப் போயிருக்க வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு மழையோ வெள்ளமோ வடிகிற வாய்ப்பில்லை என்றும் மக்கள் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறு மாறும் ரேடியோ அறிவித்தது. மாறுநாள் காலே பத்திரிகை களில் வெள்ளச் சேதங்களைப் பற்றிய படங்களையும், போலீஸார் படகுகளில் மக்களே மீட்கும் காட்சிகளையும் பார்த்த போது பயங்கரமாயிருந்தது. சேதம் மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது. - -

நிதானமாய்க்கண்ணன் யோசித்தபோது தோன்றியது: *இந்த அம்மிணி அம்மாளுக்கு என்ன தலையெழுத்து? வீட்டையே வெள்ள நிவாரண அகதி முகாம் மாதிரி மாற்றிக்கொண்டு இத்தனே பேருக்குச் சோறு தண்ணி தங்க இடம் எல்லாம் கொடுத்துச் சிரமப்பட்டு என்ன ஆகப் போகிறது? வெள்ளத்தில் சிறிதும் பாதிக்கப்படாத நகரின் நடு மைய மேட்டுப் பகுதியான போயஸ் கார்டனில் இவளுக்குச் சொந்தமாகக் கோட்டை மாதிரி ஒரு பெரிய பங்களா இருக்கிறது. வெள்ளத்திலிருந்து தப்புவதற்குத் தானும் தன் பெண்களுமாகப் பேசாமல் அங்கே போயிருக்க லாம். அப்படிச் செய்யாமல் இங்கேயே தங்கி இந்த ஜனங் களோடு ஜனங்களாகக் கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொண்டு இவர்களுக்கு உதவிச் சிரமப்படுவதில்தான் அம்மிணி அம்மாள் போன்ற சூப்பர் ஸ்டார்களின் தாய் மகிழ முடிகிறது என்றால் அவள் வாழ்வில் தான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததை இன்னும் மறக்கவில்லை என்றுதான் தெரிகிறது. கண்ணனுக்கு இந்த விஷயம் பெரிய ஆச்சரியமாகவே இருந்தது.

.