பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

137


'அந்தப் பேட்டையிலே ஏழை எளியவர்களுக்கு நம்ம ரசிகர் மன்றத்தின் சார்பில் உணவுப் பொட்டலம் வழங்க ணும். இந்தப் பாக்கத்திலே துணிமணி எல்லாம் வெள்ளத் திலே அடிச்சிட்டுப் போயிடிச்சு. தாய்மார்களுக்குச் சேலையும் ஆண் மக்களுக்கு வேஷ்டியும் வாங்கித் தரனும்’-என்று புலவர் வந்து அவ்வப்போது பணம் வாங்கிப் போய்க் கொண்டிருந்தார். * .

கண்ணன் பார்க்க அவன் கண் முன்னலேயே இந்தக் கொள்ளை நடந்தது. சாதி வித்தியாசம், ஏழை பணக்காரர் வித்தியாசம் பாராமல் தன் வீட்டு மாடியில் வந்து தங்கி யிருந்த அத்தனை பேரையும் கவனித்தாள் அம்மிணி அம்மாள். மற்ற இடங்களில் மழை வெள்ளத்தால் நிறைய டெலிஃபோன் வேலை செய்யாமற் போயிருந்தாலும் அம்மிணி அம்மாள் வீட்டு டெலிபோன் மட்டும் அதிர்ஷ்ட வசமாக ஒரு குறையுமின்றிச் சரியாயிருந்தது. அம்மிணி அம்மாளின் மகள் நந்தினி அவளுக்கு மிகவும் வேண்டிய ஒரு டாக்டருக்கு ஃபோன் பண்ணி வரவழைத்தாள். டாக்டர் எங்கேயோ காரை நிறுத்திவிட்டுப் படகில் ஏறி வீட்டு வாசலில் வந்து இறங்க வேண்டியிருந்தது. வேறு யாராவது கூப்பிட்டிருந் தால் டாக்டர் வந்திருக்கவே மாட்டார். அத்தனை சிரமம்.

இவரை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் இன்புளு, யன்ஸ்' ஜாஸ்தியாகி ஆபத்தில் கொண்டுபோய் விடமுடிகிற வாய்ப்பு உண்டு. லிக்விட் டயட்தான். பார்லி அல்லது புழுங்கரிசிக் கஞ்சி மட்டும் கொடுங்கள். முழு ஓய்வு வேண்டும்’-என்று சொல்லிக் கண்ணனுக்கு ஒர் ஊசி. போட்டு விட்டு மேற்கொண்டு மருந்துகள் சில எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார் அந்த டாக்டர்.

பயங்கர வெள்ளம் காரணமாக அந்த வட்டாரத்தில் எந்தக் கடைகளும் திறக்கப் படவில்லை. யாரோ ஆளைப் பிடித்துப் பணம் கொடுத்து அனுப்பி மவுண்ட்ரோடு