பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

முள்வேலிகள்



அன்று ஜூரம் கொஞ்சம் தணிந்திருந்ததனால் கண்ணனும் கூடத்தில் வந்து எல்லோரோடும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். மெழுகுவத்தியின் மங்கலான வெளிச் சத்தில் அவனைப் பாகவதரும், பாகவதரை அவனும் பார்த்துக் கொள்ள முடிந்தது. கண்ணபெருமானின் விரோதிகள் கம்சன், பிற அசுரர்கள் பற்றிக் குறிப்பிடும்போது பாகவதர் கொஞ்சம் அதிகமாகவே விவரித்தார். வெறுப்பு, துவேஷம் என்கிற குணங்கள் மனித சமூகத்தை வளர்க்க உதவுபவை அல்ல. அவை நம்மை அறியாமலே நம் மனத்தில் எராளமான முள்வேலிகளேயும், தடைகளையும் எழுப்பி மிக அருகிலிருப் பவர்கள் மேல்கூட விரோதத்தை வளர்த்து விடுகின்றன. கம்சன் முதலியவர்களும் கண்ணனை எதிர்த்த அசுரர்களும் வெறுப்பிலேயே தங்களைத் தாங்களே முள்வேலிகள் போட்டுப் பினைத்துக் கொண்டு அதிலேயே சிக்கி முடிவில் பயனின்றி அழிந்து போனார்கள்.'

கதைக்குக் தொடர்பில்லாமலே கொஞ்சம் வெளியே விலகி வந்து தனக்காகவே பாகவதர் இந்தக் கருத்தை அழுத்திச் சொல்வது போல் கண்ணனுக்குத் தோன்றியது. அப்போதிருந்த கண்ணனின் மனநிலையில் இக் கருத்து அவனை மிகவும் பாதித்தது. உள்ளத்தை உருக்கியது. தன் இருபக்கத்து விட்டாரையும் வெறுத்து வெளியே எடுத்த காம்பவுண்ட்டுச் சுவர்களை விடத் தான் தன் மனத்திற்குள் ளேயே தான் போட்டுக் கொண்ட துவேஷம் என்கிற முள்வேலிகள்தான் அதிகமானவை என்று இப்போது அவனுக்கே தெளிவாகத் தோன்றியது.

பாகவதரின் குரல் தொடர்ந்தது: 'வெறுப்பு என்பது பாலைவனம். அதில் எதையுமே நல்லதாகப் பயிரிட்டு